ரூ. 100 கோடி ஊழலில் சிக்கிய அனில் தேஷ்முக் மீது சச்சின் வேஸின் கடித வடிவில் வீசிய புது குண்டு

முன்னாள் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், என்ஐஏ காவலில் உள்ள சஸ்பென்ட் செய்யப்பட்ட மும்பை காவல்துறை அதிகாரி சச்சி

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தன்னிடமிருந்து ரூ 2 கோடி கோரியதாக என்ஐஏ காவலில் உள்ள சஸ்பென்ட் செய்யப்பட்ட மும்பை காவல்துறை அதிகாரி சச்சின் வேஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்சுக் ஹிரென் மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி சச்சின் வேஸ் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மும்பை காவல்துறையில் மீண்டும் பணி வாய்ப்பைப் பெற ரூ. 2 கோடி லஞ்சம் கேட்டதாக அனில் தேஷ்முக் மீது புது குண்டு வீசியுள்ளார் சச்சின் வேஸ்.

Anil Deshmukh demanded Rs 2 crore letter to Sachin Waze

மும்பை காவல்துறை ஆணையராக இருந்த பரம் பிர் சிங்கை ஊர்காவல் படைக்கு மாற்றம் செய்தது மகாராஷ்டிர அரசு. இதனையடுத்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, பரம் பிர் சிங் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது அடுக்கடுக்கான பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

முதல்வருக்கு, பரம் பிர் சிங் எழுதிய கடிதத்தில், "அனில் தேஷ்முக் மாதந்தோறும் 100 கோடி ரூபாய் மாமுல் வசூலித்து தர வேண்டும் என எனக்கும் காவல்துறையினருக்கும் உத்தரவிட்டதாகவும், குறிப்பாக நட்சத்திர விடுதிகளில் இருந்து 50 முதல் 60 கோடி ரூபாயை வசூலித்து தர வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்தார். மேலும் காவல்துறையினரின் பணி மாறுதல்களுக்கு லஞ்சம் தர வேண்டும் எனவும், முக்கியமாக வழக்கு விவகாரம் ஒன்றில் என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள் எனவும் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தேசிய வாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதால் இந்த விவகாரம் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனாவிற்கும், தேசியவாத காங்கிரஸுக்கும் இடையே புகைச்சலை கிளப்பியது.

அனில் தேஷ்முக்கை உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து பாஜக முறையிட்டது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் பரம் பிர் சிங் முறையிட்டார். இந்த வழக்கை உடனடியாகவும், நேர்மையாகவும் விசாரிக்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் வலியுறுத்தினார். பரம் பிர் சிங் தவிர்த்து மேலும் மூவர் அனில் தேஷ்முக் மீது பொது நல வழக்கு தொடுத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்குகளை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் , அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டுகளை 5 நாட்களில் சிபிஐ விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

மும்பை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சில மணி நேரங்களில் அனில் தேஷ்முக் தனது உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி சச்சின் வேஸின் வக்கீல் இன்று நீதிமன்றத்தில் ஒரு கடிதத்தை சமர்ப்பித்தார்.

அதில் மும்பை காவல்துறையில் மீண்டும் பணி வாய்ப்பைப் பெற, மகாராஷ்டிராவின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தன்னிடமிருந்து ரூ 2 கோடி கோரியதாக பரபரப்புக் குற்றச்சாட்டை இன்று தெரிவித்தார்.

மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார், சச்சின் வேஸ் மீண்டும் காவல் துறையில் பணியாற்ற விரும்பவில்லை என்றும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். இருப்பினும், அவரது கடிதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த கடிதத்தை நடைமுறைப்படி இதற்குரிய முறை மூலம் சமர்ப்பிக்கும்படி சச்சின் வேஸுக்கு அறிவுறுத்தியது.

மும்பை முன்னாள் காவல்துறை ஆணையர் பரம் பிர் சிங் அனில் தேஷ்முக் மீது ரூ 100 கோடி மாமூல் மும்பையில் வசூலிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், மீண்டும் பணியில் சேர தானும் 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக சச்சின் வேஸ் கூறியுள்ளது மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இதுவரை, தன்மீது மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் தேஷ்முக் மறுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+