ஆர்யன் கான் போதை வழக்கு.. பல லட்சம் லஞ்ச பேரம்.. ஏமாற்றிய கோஷாவி.. சாம் டி சோசா பரபரப்பு தகவல்!
மும்பை: நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது பெயிலில் வெளியே வந்துள்ளார். இவர் கைது செய்யப்பட்ட வழக்கில் அடுத்தடுத்து ஏகப்பட்ட திருப்பங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.
போதை பொருள் தடுப்பு பிரிவின் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே என்பவர்தான் ஆர்யன் கானை மும்பை அருகே கடலில் சொகுசு கப்பலில் கைது செய்தது. ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட இந்த வழக்கில் முக்கியமான சாட்சியங்களில் ஒருவர்தான் கிரண் கோஷாவி.
தனியார் துப்பறிவாளர் என்று சொல்லல்படும் கிரண் கோஷாவி ஆர்யன் கானை விடுதலை செய்ய சமீர் வான்கடேவிற்கு லஞ்சம் கொடுக்க முயன்றாதாக கூறப்பட்டடது. சமீர் வான்கடேவும் இதற்காக கிரண் கோஷாவியிடம் பேரம் பேசியதாக புகார் வைக்கப்பட்டது.

புகார் என்ன?
சில நாட்களுக்கு முன் கிரண் கோஷாவியின் பாதுகாலவர் என்று சொல்லப்படும் பிராபகர் செயில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ஆர்யன் கானை விடுவிக்க லஞ்ச பேரம் நடந்ததாக குறிப்பிட்டு இருந்தார். இதுதான் இந்த வழக்கில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆர்யனை விடுவிக்க ஷாருக்கான் தரப்பிடம் கிரண் கோஷாவி 25 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும். அதில் 8 கோடி ரூபாயை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவிற்கு கொடுக்க கிரண் கோஷாவி ஒப்புக்கொண்டதாகவும் பிராபகர் செயில் குறிப்பிட்டு இருந்தார்.

சாம் டி சோசா
சாம் டி சோசா என்ற நபர் மூலம் இந்த புரோக்கர் பணிகள் நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது ஷாருக்கானின் உதவியாளர் டாட்லானிக்கும் கிரண் கோஷாவிக்கும் இடையில் சாம் டி சோசா என்ற நபர்தான் தொடர்பு ஏற்படுத்திக்கொடுத்தார். சாம் டி சோசாதான் இந்த லஞ்சம் குறித்த அனைத்து பேச்சுவார்த்தைக்கு இடைத்தரகராக இருந்தார், இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஹோட்டல் ஒன்றிலும், கார் ஒன்றிலும் டீலிங் பேசியதாக என்று பிரபாகர் செயில் தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஷாருக்கான் உதவியாளர் டாட்லானி மூலம் சாம் டி சோசா வழியாக கிரண் கோஷாவிக்கும், வான்கடேவிற்கும் லஞ்சம் கொடுக்கப்பட இருந்ததாக இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

பேட்டி
இந்த நிலையில்தான் சாம் டி சோசா தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பரபரப்பு தகவல்களை வெளியிட்டு உள்ளார். அதில், ஷாருக்கானின் உதவியாளர் டாட்லானிக்கும், கோஷாவிக்கும் இடையில் நான்தான் பேச்சுவார்த்தையை ஏற்படுத்தினேன். கோஷாவி ஆர்யன் கானை வெளியே எடுக்க உதவி செய்வதாக கூறினார். ஆர்யன் கானை வெளியே கொண்டு வர ஷாருக்கானின் உதவியாளர் டாட்லானி 50 லட்சம் ரூபாயா கோஷாவிக்கு கொடுத்தார்.

ஏமாற்று பேர் வழி
அதன்பின்தான் கோஷாவி ஏமாற்று பேர்வழி என்று தெரிந்தது. இதனால் உடனே அவரை அந்த 50 லட்சம் ரூபாயை திருப்பி கொடுக்கும்படி கூறி, பணத்தை வாங்கி டாட்லானியிடம் திருப்பி கொடுத்துவிட்டேன். இதற்கும் அதிகாரி சமீர் வான்கடேவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. கோஷாவி யார் என்றே சமீர் வான்கடேவிற்கு தெரியாது. அவர் லஞ்ச பேரம் நடத்தவில்லை.

கோஷாவி ஏமாற்றினார்
கோஷாவி ஆர்யன் கானை வெளியே கொண்டு வருவதாக கூறினார். சமீரிடம் போனில் பேசுவது போல பொய்யாக நடித்தார். அவருக்கும் சமீர் வான்கடேவிற்கும் எந்த தொடர்பும் இல்லை, அவர் ஏமாற்று பேர் வழி என்று சாம் டி சோசா புதிய தகவலை வெளியிட்டுள்ளார். இந்த வழக்கில் சாம் டி சோசா லஞ்சம் கொடுக்க இடைத்தரகராக செயல்பட்டது உறுதியாகி உள்ளது. இதனால் விரைவில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன் மும்பையில் இவர் முன் ஜாமீனுக்கு விண்ணப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications