ரேவ் பார்ட்டியில் இருந்தது "ஆர்யான்தான்".. ஆனால் "நான் அவனில்லை".. ஷாரூக் கான் மகன் பரபர வாக்குமூலம்
மும்பை: ரேவ் பார்ட்டியில் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் தனது பெயரை பயன்படுத்தி யாரையோ அழைத்து வந்ததாக போதை தடுப்பு பிரிவினரிடம் ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கான் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Recommended Video
மேலும் தனக்கும் இந்த போதை பொருள் பார்ட்டிக்கும் தொடர்பு ஏதும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மும்பை கடற்கரையில் கார்டிலியா க்ரூசஸ் எனும் சொகுசு கப்பலில் போதை பொருள் புழங்கும் ரேவ் பார்ட்டி (போதை பொருள் பயன்படுத்தி நிர்வாணமாக ஆண்களும் பெண்களும் நடனம் ஆடும் பார்ட்டி. இதில் ஒருவர் மீது ஒருவர் விருப்பப்பட்டால் பாலியல் உறவுகளையும் மேற்கொள்வர்) நடப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு சனிக்கிழமை இரவு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு சென்ற போலீஸார் சட்டவிரோத போதை பொருள்களான கோகைன், ஹாஷிஷ், எம்சிஎம்ஏ உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இந்த போதை பொருள் பார்ட்டியில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கானுக்கும் தொடர்பிருப்பதாக அவரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆர்யான் கான்
இதனால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கப்பலில் நடக்கும் பார்ட்டிக்கு தலைமை தாங்கியதே ஆர்யான்தான் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்காக அவர் எந்த வித நுழைவு கட்டணமும் கட்டவில்லை என தெரிவிக்கிறார்கள். ஆனால் அவரிடம் நடத்திய விசாரணையில் தனது பெயரில் வேறு சிலரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைத்ததாக ஆர்யான் கான் தெரிவித்துள்ளார்.

கப்பலில் பார்ட்டி
இந்த கப்பலில் பார்ட்டியில் இருந்த வெளிநாட்டினர் உள்பட அனைவரும் விசாரணை வளையத்தில் உள்ளார்கள். இந்த கப்பலின் உரிமையாளருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆர்யான் கான் அந்த கப்பலில் நுழைந்ததற்கான வீடியோக்கள் போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்துள்ளன. அதில் அவர் வெள்ளை நிற டீ சர்ட் , அதன் மேல் பட்டன் போடாத ரெட் கோட், தொப்பி, நீல நிற ஜீன்ஸ் பேன்ட் அணிந்து கொண்டு கப்பலினுள்ளே சென்றது தெரியவந்தது.

செல்போன் பறிமுதல்
ஆர்யான் கானின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் இருக்கும் மெசேஜ்கள், வாட்ஸ் ஆப் மெசேஜ்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த ரேவ் பார்ட்டியில் கலந்து கொண்ட 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் யார் என்பது பின்வருமாறு:
முன்முன் தாமேச்சா
நுபுர் சரிகா
இஸ்மீத் சிங்
மோஹாக் ஜாஸ்வால்
விக்ராந்த் சோக்கர்
கோமித் சோப்ரா
ஆர்யான் கான்
அர்பாஸ் மெர்சன்ட்
இவர்களில் அர்பாஸ் மெர்சன்ட், ஆர்யான் கானின் நெருங்கிய நண்பராவார்.

டெல்லி பிசினஸ்மென்
இந்த 8 பேரில் 3 பேர் பெண்கள். இவர்கள் டெல்லி தொழிலதிபர்களின் மகள்கள் என கூறப்படுகிறது. இந்த ரேவ் பார்ட்டியில் கலந்து கொண்ட விஐபிகள் குறித்த விவரங்களை போதை பொருள் தடுப்பு பிரிவினர் சேகரித்து வருகிறார்கள். விசாரணை வளையத்தில் உள்ள அனைவருக்கும் எதிரான ஆதாரங்கள் சிக்கியுள்ளதால் இந்த விவகாரத்தில் ஆர்யான் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications