90 வயதிலும் 3 மணி நேரம் இசை கச்சேரி நடத்திய ஆஷா போஸ்லேவுக்கு மும்பை மருத்துவமனையில் நடந்தது என்ன?
மும்பை: பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் தற்போது காலமாகியுள்ளார். அவருக்கு என்ன நேர்ந்தது, அவருடைய உடல்நலனுக்கு என்ன பிரச்சனை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இசைக்குடும்பத்தைச் சேர்ந்த ஆஷா, புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் இளைய சகோதரி ஆவார். தந்தை தீனாநாத் மங்கேஷ்கர் ஒரு செவ்வியல் இசைப் பாடகர்.

தொடக்க காலம்: தனது 10-வது வயதிலேயே (1943) பாடத் தொடங்கினார். ஆரம்பத்தில் தனது சகோதரி லதா மங்கேஷ்கருக்குக் கிடைக்காத, சவாலான மற்றும் துள்ளலான பாடல்களைப் பாடியே தனது தனித்துவத்தை நிலைநாட்டினார்.
எத்தனை பாடல்கள் பாடியுள்ளார்?
ஆஷா போஸ்லே உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பதிவு செய்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
பாடல்களின் எண்ணிக்கை: அவர் தனது 8 தசாப்த கால (80 ஆண்டுகள்) இசைப் பயணத்தில் 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
மொழிகள்: தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி என சுமார் 20-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச மொழிகளில் அவர் பாடியுள்ளார்.
இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். (உதாரணம்: செண்பகமே செண்பகமே, ஓ ஹோ ஹோ என் தந்தை, நெஞ்சினிலே நெஞ்சினிலே).
தனது 16 ஆவது வயதில் தன்னை விட 20 வயது பெரியவரான போஸ்லேவை ஆஷா திருமணம் செய்துக் கொண்டார். பாடகி ஆஷா போஸ்லேவின் கணவர், அவரது குடும்பத்தினருடனும், குறிப்பாக சகோதரி லதா மங்கேஷ்கருடனும் நெருங்கிப் பழக வேண்டாம் எனத் கண்டிப்புடன் தெரிவித்தார். அவரது இரண்டாவது மகன் ஹேமந்த் பிறந்த பின் நிலை சற்று சீரடைந்தாலும், அது நீண்ட காலம் நீடிக்கவில்லை.
திருமணத்தில் துன்புறுத்தல்களை அனுபவித்த அவர், மூன்றாவது குழந்தையுடன் கர்ப்பமாக இருந்தபோது வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. அக்காலகட்டத்தை விவரித்தபோது, அவர் கூறியதாவது:
"அங்கு கொடுமைகளும் அவமரியாதைகளும் இருந்தன. இளைய மகன் ஆனந்த் வயிற்றில் இருக்கும்போது நான் வெளியேறச் சொல்லப்பட்டு என் குடும்பத்தினரிடம் திரும்பினேன்.
நான் யாரையும் குறை சொல்லவில்லை, விரோதமும் இல்லை. போஸ்லேவால் என் மூன்று அற்புதமான குழந்தைகளும் பிறந்தனர்; வாழ்க்கை நன்றாகவே அமைந்தது என பல பேட்டிகளில் அவர் தெரிவித்துள்ளார். தனக்கு 90 வயதானாலும் 3 மணி நேரம் தொடர்ந்து தன்னால் பாட முடியும் என பெருமிதம் பொங்க தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே, கடும் சோர்வு மற்றும் மார்புச் சளித் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சிகிச்சை தொடர்ந்து வருவதாக, விரைவில் குணமடைவார் என குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். தங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறும், விரைவில் நல்ல செய்தி வெளியிடுவோம் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்த நிலையில் அவரது உயிர் பிரிந்ததாக சொல்லப்படுகிறது.
ஆஷா போஸ்லேவுக்கு 3 பிள்ளைகள். அதில் கடந்த 2012 ஆம் ஆண்டு அவரது மகள் வர்ஷா தற்கொலை செய்து கொண்டார். மகன் ஹேமந்த் கடந்த 2015 ஆம் ஆண்டு கேன்சரால் இறந்துவிட்டார். ஆனந்த் என்ற மகனுடன் ஆஷா இருந்து வந்தார்.












Click it and Unblock the Notifications