நிற்க வைங்க! இளம் வீரர் கேட்டதும்.. ரோஹித்துக்கு வந்ததே கோபம்! பட்டென முகத்தை திருப்பி! பரபர சம்பவம்
மும்பை: நேற்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நடந்து கொண்ட விதம் சர்ச்சையாகி உள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சொதப்பி வருகிறது. ஆசிய கோப்பை 2022 தொடரில் நேற்று இலங்கைக்கு எதிராக நடந்த சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 173-8 ரன்களை 20 ஓவரில் எடுத்தது. அதன்பின் ஆடிய இலங்கை அணி 1 பந்து மீதம் இருக்கும் நிலையில் இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.

இலங்கை
நேற்று இந்த போட்டியில் ரோஹித் சர்மா மிகவும் கோபமாக காணப்பட்டார். அவர் பொதுவாக கேப்டன்சியில் கூலாகவே இருப்பார். மும்பை அணியின் கேப்டனாக இருந்த சமயங்களில் அவர் இதை போன்ற இக்கட்டான நேரங்களில் ஆடி இருக்கிறார். அப்போதெல்லாம் இதை விட சிறிய ஸ்கோர்களை ரோஹித் சர்மா டிபன்ட் செய்து இருக்கிறார். அப்போதெல்லாம் கடினமான நேரங்களில் கூட ரோஹித் சர்மா நல்ல முடிவுகளை எடுப்பார்.

ரோஹித் சர்மா
ஆனால் இந்திய அணியின் கேப்டன் ஆன பின் ரோஹித் இப்படி இல்லை. அவர் அடிக்கடி கோபம் அடைகிறார். சமீபத்தில் கூட ஒரு தொடரில் புவனேஷ்வர் குமார் கேட்சை விட்டதும் ரோஹித் பந்தை காலால் உதைத்தார். அவரின் செயல் மிக மோசமான ஒன்றாக பார்க்கப்பட்டது. கடந்த பாகிஸ்தான் போட்டியிலும் ரோஹித் சர்மா கோபமாக காணப்பட்டார். இக்கட்டான நேரத்தில் முடிவு எடுக்க முடியாமல் அவர் திணறினார். அதோடு ஓவர் ரொட்டேஷனிலும் அவர் திணறினார்.

அவுட் ஆனார்
நேற்று போட்டியிலும் கூட இதேபோல்தான் ரோஹித் சர்மா கோபமாக காணப்பட்டார். 15 ஓவர்கள் தாண்டியதும் இலங்கை அணி வெற்றி இலக்கை நெருங்கியது. இதனால் ரோஹித் சர்மா என்ன செய்வது என்று தெரியாமல் கோபமாக காணப்பட்டார். அதிலும் கடைசி ஓவரில் அர்ஷிதீப் சிங் பீல்டிங் மாற்றும்படி கேட்டார். ஆனால் ரோஹித் சர்மா கோபமாக அதை மறுத்துவிட்டார். முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு ரோஹித் சர்மா வெடுக்கென திரும்பினார். இந்த வீடியோ வெளியாகி உள்ளது.

இளம் வீரர்
இணையத்தில் பலர் இதை பகிர்ந்து வருகின்றனர். அர்ஷிதீப் சிங்கிற்கு 23 வயதுதான் ஆகிறது. அவர் மிகவும் இளம் வீரர்.கடைசி ஓவரில் கண்டிப்பாக அவர் டென்ஷனாக இருப்பார். அப்படிப்பட்ட நேரங்களில் ரோஹித் சர்மாதான் அவருக்கு நம்பிக்கை தர வேண்டும். ஆனால் மூத்த வீரர் போல செயல்படாமல்.. ஒரு கேப்டன் போல செயல்படாமல் ரோஹித் சர்மா கோபமாக நடந்து கொண்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications