பற்றி எரிந்த நாக்பூர்.. வன்முறையை தூண்டிய முக்கிய குற்றவாளி கைது.. யார் இந்த ஃபஹீம் கான்? பின்னணி
மும்பை: அவுரங்கசீப் கல்லறை தொடர்பான சர்ச்சையால் நாக்பூரில் வன்முறை வெடித்தது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் வன்முறையை தூண்டியதாக ஃபஹீம் கான் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அரசியல் கட்சியை சேர்ந்த இந்த ஃபஹீம் கான் யார்? அவரது பின்னணி என்ன? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக உள்ளார். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக உள்ளனர். இந்நிலையில் தான் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் திடீரென்று வன்முறை வெடித்தது.

கடந்த 17 ம் தேதி மாலையில் திடீரென்று நாக்பூரில் வன்முறை வெடித்தது. வெவ்வேறு சமுதாயங்களை சேர்ந்த இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இந்த மோதல் வன்முறையானது. டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. உடனடியாக போலீசார் வந்து வன்முறையை அடக்க முயன்றனர். தடியடி நடத்தப்பட்டது.
இதையடுத்து வன்முறை கட்டுக்குள் வந்தது. இந்த வன்முறையில் 38 பேர் வரை காயமடைந்தனர். இதில் 33 பேர் போலீசார் ஆவர். ஒரு போலீஸ்காரர் மீது கேடரியால் தாக்கப்பட்டது. தொடர்ந்து பதற்றம் நிலவியது. இதனால் நாக்பூரில் 10 போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதுபற்றி விசாரணை நடத்தியபோது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. வன்முறைக்கு முக்கிய காரணம் அவுசரங்கசீப் கல்லறை தொடர்பான விவகாரம் தான் என்று கூறப்பட்டது.
அதாவது மகாராஷ்டிரா மாநிலம் குல்தாபாத்தில் அவுரங்கசீப் கல்லறை இருக்கிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த ‛ஷாவா' திரைப்படத்தில் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் மகாராஷ்டிரா சட்டசபையில் சமாஜ்வாதி கட்சியின் அபு ஆஸ்மி, அவுரங்கசீப்பை நல்லவர் என புகழ்ந்து இருப்பார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியை கொடூரமாக சித்ரவதை செய்து கொன்ற அவுரங்கசீப்பின் கல்லறை சிவாஜி மண்ணான மகாராஷ்டிராவில் இருக்க கூடாது. அகற்ற வேண்டும் என்று பலரும் கூற தொடங்கினர். போராட்டங்கள் நடந்தன. அவுரங்கசீப் கொடும்பாவி எரிக்கப்பட்டது. குரான் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதையடுத்து தான் நாக்பூரில் வன்முறை வெடித்தது.
இந்த வன்முறை தொடர்பாக இதுவரை மொத்தம் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வன்முறை என்பது ஒரு நபரால் தூண்டப்பட்டதா? இல்லாவிட்டால் குறிப்பிட்ட அமைப்பின் மூலம் தூண்டப்பட்டதா? என்பது பற்றி போலீசார் விசாரணைை தொடங்கி நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1200 பேர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 200 பேர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. மற்றவர்களை அடையாளம் கண்டு கைது நடவடிக்கையை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் வன்முறையை தூண்டியதாக ஃபஹீம் கான் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர் யார் என்றால் மைனாரிட்டி டெமாக்கிரட்டிக் கட்சியை சேர்ந்தவர் ஆவார். நாக்பூரில் வன்முறையை தூண்டி விட்ட புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் நாளை வரை விசாரணை நடத்த காவலில் எடுத்துள்ளனர். இருப்பினும் ஃபஹீம் கான் எந்த வகையில் வன்முறையை தூண்டினார் என்பது பற்றிய விவரத்தை போலீசார் இன்னும் தெரிவிக்கவில்லை. இந்த வன்முறை என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டு சதி வேலையுடன் நடத்தப்பட்டுள்ளது என்று நேற்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் கூறினர். இதையடுது்து இன்று ஃபஹீம் கானை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications