மகாராஷ்டிரா:பாஜக அணி 178-200; காங்கிரஸ் அணி 82-102 இடங்களில் வெல்லும்: Axis My India எக்ஸிட் போல்
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியே பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்கிறது Axis My India எக்ஸிட் போல் முடிவுகள். மொத்தம் உள்ள 288-ல் 178 முதல் 200 இடங்களை பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியும் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி அணி 82 முதல் 102 இடங்களையும் கைப்பற்றும் என்கிறது Axis My India எக்ஸிட் போல் முடிவுகள்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று நடைபெற்றது. இதனையடுத்து நேற்று இரவு முதல் எக்ஸிட் போல் முடிவுகள் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிரா தொடர்பான பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியே அமையும் என தெரிவித்திருக்கின்றன.
இந்த நிலையில் இன்று Axis My India எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த கருத்து கணிப்பும் மீண்டும் பாஜக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது.
Axis My India எக்ஸிட் போல் முடிவுகள்:
பாஜகவின் மகாயுதி கூட்டணி
வெல்லும் வாய்ப்புள்ள இடங்கள்: 178-200 (48% வாக்குகள்)
பாஜக 98 முதல் 107 இடங்கள் (27% வாக்குகள்)
ஷிண்டே சிவசேனா 53 முதல் 58 இடங்கள் (13% வாக்குகள்)
அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 25 முதல் 30 இடங்கள் (7% வாக்குகள்)
இதர கட்சிகள் 2 முதல் 5 இடங்கள் (1% வாக்குகள்)
காங்கிரஸின் மகா விகாஸ் அகாடி கூட்டணி
வெல்லும் வாய்ப்புள்ள இடங்கள்: 82-102 (37% வாக்குகள்)
காங்கிரஸ் 28 முதல் 36 இடங்கள் (13% வாக்குகள்)
உத்தவ் தாக்கரே சிவசேனா 26 முதல் 32 இடங்கள் (12% வாக்குகள்)
சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் 26 முதல் 30 இடங்கள் (11% வாக்குகள்)
இதர கட்சிகள் 2 முதல் 4 இடங்கள் (1% வாக்குகள்)

பிராந்தியங்கள் அடிப்படையிலான முடிவுகள்:
மும்பை பிராந்தியம் (36 தொகுதிகள்)
பாஜகவின் மகாயுதி கூட்டணி - 22 இடங்கள் (45% வாக்குகள்)
காங்கிரஸின் மகா விகாஸ் கூட்டணி- 14 இடங்கள் (43% வாக்குகள்)
கொங்கண் - தானே பிராந்தியம் (39 தொகுதிகள்)
பாஜகவின் மகாயுதி கூட்டணி - 24 இடங்கள் (50% வாக்குகள்)
காங்கிரஸின் மகா விகாஸ் கூட்டணி- 13 இடங்கள் (33% வாக்குகள்)
இதர கட்சிகள்- 2 இடங்கள் (15% வாக்குகள்)
மராத்வாடா (46 தொகுதிகள்)
பாஜகவின் மகாயுதி கூட்டணி - 30 இடங்கள் (45% வாக்குகள்)
காங்கிரஸின் மகா விகாஸ் கூட்டணி- 18 இடங்கள் (38% வாக்குகள்)
இதர கட்சிகள்- 1 இடங்கள் (12% வாக்குகள்)
வடக்கு மகாராஷ்டிரா (47 தொகுதிகள்)
பாஜகவின் மகாயுதி கூட்டணி - 38 இடங்கள் (53% வாக்குகள்)
காங்கிரஸின் மகா விகாஸ் கூட்டணி- 7 இடங்கள் (32% வாக்குகள்)
இதர கட்சிகள்- 2 இடங்கள் (13% வாக்குகள்)
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications