மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஆடை" அணியாவிட்டாலும்.. பெண்கள் அழகாவே இருப்பாங்க.. மேடையிலேயே சொன்ன பாபா ராம்தேவ்

பாபா ராம்தேவ் பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையாக வெடித்து கிளம்பி உள்ளது

Google Oneindia Tamil News

மும்பை: இன்னொரு சர்ச்சை பேச்சு, அதே மகாராஷ்டிர மாநிலத்தில் கிளம்பி உள்ளது.. பாபா ராம்தேவ் பெண்கள் குறித்து பேசியதுதான் இணையத்தில் வைரலாகி கொண்டுமிருக்கிறது.

யோகா குரு பாபா ராம்தேவ் - பாஜக ஆதரவாளர் ஆவார்.. கடந்த காங்கிரஸ் ஆட்சியில், ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி இந்திய அளவில் ஃபேமஸ் ஆனவர்..

கடந்த 2006ம் ஆண்டு பதஞ்சலி என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருபவர்.. உணவு பொருட்கள், மருந்து பொருட்கள், அழகு சாதன பொருட்கள் போன்றவை பதஞ்சலி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, உலக அளவில் மார்க்கெட்டிங் செய்யப்பட்டு வருகின்றன.

Baba Ramdev statement about womens dressing creates controversy in Mumbai meeting

தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில், இந்த பதஞ்சலி விற்பனை கூடங்கள் செயல்பட்டும் வருகின்றன.. பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் ஆயுர்வேதம் என்றும் இயற்கையாக தயாரிக்கப்பட்டது என்றும் சொல்லி விளம்பரம் செய்யப்பட்டு வருவதாக சொல்லப்பட்டு வரும்நிலையில், அந்த பொருட்களில் கெமிக்கல்களும் கலந்துள்ளதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்...

அதேபோல, பாபா ராம்தேவ் எது பேசினாலும் அது பரபரப்பாகிவிடும். அந்தவகையில், இப்போதும் ஒரு விஷயத்தை பேசி, பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.. பதஞ்சலி யோகா பீடமும் மும்பை மகிளா பதஞ்சலி யோகா சமிதியும் இணைந்து யோகா அறிவியல் முகாம் மற்றும் மகளிர் கூட்டத்தை தானேயின் ஹைலேண்ட் பகுதியில் ஏற்பாடு செய்திருந்தன.. இந்த கூட்டத்தில் அம்ரிதா ஃபட்னாவிஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில் அவதரித்த திருச்சானூர் பத்மாவதி..ஏழுமலையானின் பிறந்தநாள் அன்பளிப்புகள் ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில் அவதரித்த திருச்சானூர் பத்மாவதி..ஏழுமலையானின் பிறந்தநாள் அன்பளிப்புகள்

அப்போது பாபா ராம்தேவ் பெண்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்... அந்த சமயத்தில், பாபா ராம்தேவ் சொன்ன கருத்துதான், இப்படி பேசுபொருளாக ஆகி உள்ளது. பெண்கள் எதையும் அணியாவிட்டாலும் அழகாகவே இருப்பார்கள் பேசியிருக்கிறார்.. அதுவும் தேவேந்திர ஃபட்னாவிஸ் மனைவி முன்பாகவே இவர் பேசியிருப்பது, மகாராஷ்டிர மாநிலத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள்..

அவர்கள் சல்வார் உடையில் அழகாக இருக்கிறார்கள்.. அவர்கள் எதுவும் அணியாவிட்டாலும் என் பார்வையில் அவர்கள் அழகாக இருக்கிறார்கள் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.. ஏற்கனவே, ஏக்நாத் ஷிண்டே குழுவை சேர்ந்த அப்துல் சத்தார், என்சிபியை சேர்ந்த சுப்ரியா சுலேவிடம் பேசிய கேஸ்களே இன்னும் முடியாமல் இருக்கும்போது, அடுத்த சர்ச்சை கிளம்பி உள்ளது.

English summary
Baba Ramdev statement about womens dressing creates controversy in Mumbai meeting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X