இனி ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் மட்டுமே கட்டணம்.. மத்ததெல்லாம் இலவசம்.. ஆர்பிஐ அதிரடி
மும்பை: பணமில்லா பரிவர்த்தனைகளான வங்கிக் கணக்கில் மீதமுள்ள தொகை பார்ப்பது, காசோலை புத்தகம் கோருவது, வரிகளை செலுத்துவது, நிதி பரிமாற்றம் செய்வது ஆகியவை இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளாக கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிக் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் மையங்களில் மாதந்தோறும் 5 முறையும் மற்ற வங்கி ஏடிஎம்களில் மாதந்தோறும் 3 முறையும் கட்டணமில்லாமல் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கூடுதலாக செய்யும் நிதி பரிவர்த்தனைக்கு 17 ரூபாயும், நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ 6-ம் வசூலிக்கப்பட்டு வந்தது. சர்வதேச பரிவர்த்தனைகள் என்றால் பேலன்ஸ் சரிபார்க்க மட்டும் 17 ரூபாய் கட்டணம், பணம் எடுத்தால் 169 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்ற விதி கடந்த ஜனவரி மாதம் முதல் விதிக்கப்பட்டது.
இதை வாடிக்கையாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். தங்கள் பணத்தை எடுப்பதற்கு கட்டணம் ஏன் செலுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினர். இந்த 5 முறை பரிமாற்றத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் கோளாறு, பணம் இல்லாமல் இருக்கும்போது செய்யப்படும் பரிமாற்றமும் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பணமில்லா பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அது இலவச பரிவர்த்தனைகளின் கீழ் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான அறிக்கையை ஆர்பிஐ வழங்கியுள்ளது. எனவே இலவச பணபரிமாற்றத்தை இனி முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதாவது வங்கி தரப்பிலோ, வாடிக்கையாளர் தரப்பிலோ தோல்வி அடைந்த பரிவர்த்தனைகள், பணபரிமாற்றம் அல்லாத சேவைகளான வங்கிக் கணக்கில் பேலன்ஸ் தெரிந்து கொள்ளுதல், காசோலை புத்தகம் கோருவது, வரி செலுத்துவது ஆகியவற்றை இனி இலவச பரிவர்த்தனையில் சேர்க்கப்படாது.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications