அரசு வேலை வேண்டாம்.. முடி வெட்டியே மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்.. ‘சலூன்' தொழிலாளி அதிரடி

Subscribe to Oneindia Tamil

மும்பை: ''மும்பையில் முடித்திருத்தும் ஒருவர் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிப்பதோடு, இந்த வேலையில் இருக்கும் சுதந்திரம் உள்ளது. இதனால் தொடக்கநிலை சார்ந்த அரசு பணியும் வேண்டாம்'' என்று கூறியுள்ள தகவல் தொடர்பான பதிவு தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது.

barber-earns-nearly-rs-1-lakh-monthly-in-mumbai-and-reject-entry-level-government-job
Photo Credit:

ஹர்ஷ் குப்தா மதுசூதன் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று காலையில் பதிவு ஒன்றை செய்தார். அந்த பதிவில் மும்பையில் 'பார்பர்' (முடிதிருத்துபவர்) மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிப்பதோடு, இந்த பணியில் உள்ள சுதந்திரம் வேறு எங்கும் இல்லை என்று அரசு வேலை கூட வேண்டாம் என கூறுவதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஹர்ஷ் குப்தா மதுசூதன் வெளியிட்டுள்ள பதிவில், ''இன்று காலை 'அர்பன்' சேவை (வீட்டுக்கு வந்து முடிவெட்டும் சேவை) மூலம் முடிதிருத்தம் செய்துகொண்டேன். அப்போது அந்த முடிதிருத்துபவர் மும்பையில் வசித்து வந்தாலும், பூர்வீகம் உத்தர பிரதேச மாநிலம் ஆசம்கர் என்றார்.

வாரத்தில் ஆறு நாட்கள் காலை முதல் இரவு வரை உழைக்கும் அவர், பயண செலவுகள் போக மாதத்திற்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். வேலைவாய்ப்புகளுக்கோ அல்லது பணிக்கோ எந்த பற்றாக்குறையும் இல்லை என்றும், கடினமாக உழைக்க மட்டுமே வேண்டும் என்றும் அவர் கூறினார். தனக்கு தன் வேலையும் அதில் உள்ள சுதந்திரமும் பிடித்துள்ளதால், தொடக்க நிலை அரசு வேலை கிடைத்தாலும் அதை ஏற்கமாட்டேன் என்றார்.

இதையடுத்து நான் அவரிடம் உத்தர பிரதேசம் பற்றி விசாரித்தேன். முன்பு தனது கிராமத்திலிருந்து லக்னோ செல்ல 7-8 மணி நேரம் ஆனது. தற்போது மிக குறைந்த நேரத்தில் சென்று வர முடிகிறது என்றார். நெடுஞ்சாலைகள் மிகவும் சிறப்பாக இருப்பதால், பயணத்தின்போது தேநீர் கோப்பையிலிருந்து தேநீர் சிந்துவதற்கு கூட வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் வளர்ச்சி பணிகளில் அவர் மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருந்தார். கிராமத்தில் தனது குடும்பத்திற்குச் சில அரசு திட்டங்களின் பலன்கள் கிடைத்ததாகவும், ஆனால் நகரத்தில் அப்படி எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறினார். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதாக கூறும் அவர் பெரும்பாலும் Refund பெறுவதாகவும் தெரிவித்தார்.

அவருக்கு ஒரு மகன் உள்ளார். தனியார் மழலையர் பள்ளியில் படிக்க வைக்கிறார். அவரது மனைவியும் முன்பு வேலைக்கு சென்றார். ஆனால் தற்போது குழந்தை சிறியதாக இருப்பதால் வேலைக்கு செல்லவில்லை. ஒவ்வொருவரும் இந்தியா மற்றும் தனது வாழ்க்கை குறித்த இந்த நச்சுத்தன்மை வாய்ந்த நேர்மறை எண்ணத்தை கைவிட வேண்டும் என்றார்'' என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+