60+ பவுன்சர்கள்.. "கொலை மிரட்டலை" தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் நடந்த பிக்பாஸ் ஷூட்டிங்! ஏன் இப்படி?
மும்பை: பாபா சித்திக் கொலையைத் தொடர்ந்து லாரன்ஸ் பிஷ்னோய் கேங் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் கொடுத்தது. இதனால் அவர் இந்த வாரம் பிக்பாஸ் ஷூட்டிங்கை ரத்து செய்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திட்டமிட்டபடி பிக்பாஸ் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடந்த வாரம் அஜித் பவார் என்சிபி தலைவர் பாபா சித்திக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சல்மான் கான்: இந்தச் சம்பவத்தால் அவரது நெருங்கிய நண்பரான சல்மான் கான் மன ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். கொலை மிரட்டல்களும் வந்த நிலையில், கடந்த ஒரு வாரம் அவர் எங்கும் செல்லவில்லை. இதற்கிடையே இப்போது ஒரு வாரம் கழித்து சல்மான் கான் மீண்டும் தனது வழக்கமான பணிகளுக்கு மெல்லத் திரும்பியுள்ளார்.
தமிழில் விஜய் சேதுபதியை போல இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தான் தொகுத்து வழங்கிக் கொண்டு இருக்கிறார். அதன் படப்பிடிப்பு வாரவாரம் நடைபெற வேண்டும். கடந்த வாரம் பாபா சித்திக் மரணச் செய்தி கேட்டவுடன் சல்மான் கான் ஷூட்டிங்கை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு உடனே மருத்துவமனைக்குக் கிளம்பினார். இப்போது அவர் மீண்டும் பிக்பாஸ் ஷூட்டிங்கிற்கு திரும்பி இருக்கிறார்.

பலத்த பாதுகாப்பு: பிஷ்னோய் கேங் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் நிலையில், இந்த வாரம் அவர் பிக்பாஸ் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள மாட்டார் என முதலில் தகவல் வெளியானது. இருப்பினும், அவர் ஷூட்டிங்கிற்கு திரும்பினார், நேற்றைய தினம் பலத்த பாதுகாப்புடன் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. இதற்காக வியாழக்கிழமை இரவே அவர் செட்டுக்கு சென்றுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தயாரிக்கும் நிறுவனம் அங்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்த நிலையில், அங்குள்ள அதி பாதுகாப்பான அறையில் தான் சல்மான் கான் தங்கியிருக்கிறார். ஷூட்டிங் நடந்த இடம் மற்றும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளில் சுமார் 60 பவுன்சர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே தான் ஷூட்டிங் நடந்துள்ளது.

ட்விஸ்ட்! மிரட்டல் விடுத்த பிஷ்னோய் கேங்.. திடீரென பேச்சுவார்த்தைக்கு அழைத்த சல்மான் கானின் Ex காதலி
சோதனை: ஷூட்டிங் நடந்த இடத்திற்கு வந்த பார்வையாளர்கள் மட்டுமின்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் கூட பலத்த சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனர். ஷட்டிங் ஸ்பாட்டிற்கு ஆதார் அட்டையைக் காட்டிய பிறகே அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். மேலும், அனைத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் படப்பிடிப்பு முழுமையாக முடியும் வரை தளத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை.. அந்தளவுக்குக் கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்துள்ளது.

முன்னதாக சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் அதிகரித்த நிலையில், மகாராஷ்டிர அரசு அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை ஒய்-பிளஸ் அந்தஸ்துக்கு உயர்த்தியது. அதன்படி அவருக்கு எல்லா நேரங்களிலும் ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒய்- பிளஸ் பிரிவின் கீழ் 2 முதல் 4 கமாண்டோக்கள் மற்றும் போலீசார் உட்பட 11 பேர் எப்போதும் பாதுகாப்பிற்கு இருப்பார்கள்.
பின்னணி என்ன: கடந்த 1998ல் சல்மான் கான் பாலிவுட் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ராஜஸ்தான் சென்றிருந்தார். அங்கு அவர் கலைமானை (blackbucks) வேட்டையாடியதாகப் புகார் எழுந்தன. இதற்காகச் சட்ட நடவடிக்கையை அவர் எதிர்கொண்டார். இந்த கலைமானை பிஷ்னோய் சமூகத்தினர் தெய்வமாக வழிபடுவார்கள். இதன் காரணமாகவே சல்மான் கானுக்கு அந்த கேங் குறிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications