பாஜக பெண் தலைவர் சனா கான் கொலை.. கணவரை கைது செய்த போலீஸ்.. விசாரணையில் பகீர் தகவல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் காணாமல் போன பாஜக பெண் தலைவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக அவருடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்தவர் சனா கான். நாக்பூரில் வசித்து வரும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினரிடம் ஜபல்பூர் சென்றுவிட்டு வருவதாக கூறியிருந்தார்.

BJP Leader Sana Khan killed by her husband in Jabalpur

இதைத் தொடர்ந்து தனியார் பேருந்தில் ஏறி ஜபல்பூர் சென்றுள்ளார். மறுநாள் தான் வந்து சேர்ந்துவிட்டதாக தனது தாயிடம் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் தனது மகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனால் பதறிய அவரது குடும்பத்தினர் அவரை தேடி ஜபல்பூருக்கு சென்ற நிலையில் அங்கு சனா கான் கிடைக்கவில்லை. இது குறித்து உறவினர்களின் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சனா கானின் கணவர் அமித் சாஹு என்கிற பப்புவை (37) போலீஸார் கைது செய்துள்ளனர். இவரை ஜபல்பூரில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.

சனாகானின் கணவர் ஒரு தாபா வைத்து நடத்தி வருகிறார். பப்புவிடம் நடத்திய விசாரணையில் அவருக்கும் சனா கானுக்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு இருந்து வருகிறதாம். பணத்திற்காகவே இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுமாம். இந்த நிலையில் சம்பவத்தன்று நாக்பூரிலிருந்து சனாகான் அமித்தை சந்திக்க வந்துள்ளார்.

அப்போது இருவருக்கும் வழக்கம் போல் பணம் குறித்து தகராறு ஏற்பட்டதாம். சனா கான் தனது கணவரை கடுமையாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அமித், கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாராம். இதையடுத்து சனாவின் தலையை பிடித்து அங்கிருந்த சுவற்றில் முட்டியுள்ளார். இதையடுத்து தலையில் காயமடைந்த சனா கான் சரிந்து விழுந்தார்.

இதையடுத்து அவர் இறந்ததை உறுதி செய்த அமித், சனா கானின் உடலை மூட்டையாக கட்டி மேரோகாவ்ன் கிராமத்தில் உள்ள ஹிரான் ஆற்றில் வீசிவிட்டார். இதையடுத்து அமித்தை அழைத்து கொண்டு போலீஸார் சனாவின் உடலை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாஜகவில் சிறுபான்மையினர் பிரிவின் நிர்வாகியாக இருந்தவர் சனா கான். இவருக்கு வயது 34 ஆகும். அமித் இந்த கொலைகளுக்கு உடந்தையாக இருந்தவர் குறித்த பெயரையும் தெரிவித்துள்ளார். போலீஸார் அந்த நபரை தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+