மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்! இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக
மும்பை: மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்காக ஏற்கெனவே முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
கடந்த லோக்சபா தேர்தலை போல கோட்டைவிட்டு விடாமல், இந்த முறை அதிக அளவில் சீட்களை கைப்பற்றிவிட வேண்டும் என்று பாஜக+ஷிண்டே சிவசேனா+அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியோரின் 'மகாயுதி' கூட்டணி தீவிரமாக முயன்று வருகின்றன. மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் இருக்கின்றன. இதில் யாருக்கு எவ்வளவு தொகுதி என்பது குறித்து கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

ஷிண்டே தனது கட்சிக்கு அதிக எண்ணிக்கையில் சீட்களை கேட்டிருந்தார். ஆனால் பாஜக மறுத்துவிட்டது. கடந்த முறை பட்னாவிஸ்தான் முதல்வராக வேண்டியது. ஆனால், உங்களுக்கு முதல்வர் சீட்டை கொடுத்துவிட்டோம். எனவே, தொகுதி பங்கீட்டில் அதிகம் கேட்காதீர்கள் என பாஜக, ஷிண்டேவின் வாயை அடைத்துவிட்டது. இப்படி ஒரு வழியாக தொகுதி பங்கீடு மூன்று கட்சிகளுக்குள்ளும் நடந்து முடிந்திருக்கிறது. இதில், பாஜக 151 தொகுதிகளில் களம் காண்கிறது. மீதமுள்ள தொகுதிகளில் மற்ற இரண்டு கட்சிகள் களமிறங்குகின்றன.
பாஜகவை பொறுத்தவரை கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர், 99 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்திருந்தது. இதில் தமிழர்களுக்கு கணிசமான அளவுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 22 பெயர்கள் இடம் பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications