Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடுரோட்டில் சொகுசு காரை நிறுத்திய இளைஞர்.. அடுத்த செய்த முகம் சுளிக்க வைக்கும் சம்பவம்! ரொம்ப மோசம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: நமது நாட்டில் பொது இடங்களில் அத்துமீறி முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்களில் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்தே வருகிறது. அத்தனை பேர் இருக்கிறார்களே என்பதைக் கூட யோசிக்காமல் இவர்கள் செய்யும் சம்பவங்கள் அருவருக்கத்தக்க வகையிலேயே அமைகிறது. அப்படி பொது இடத்தில் மிக மோசமான செயலை செய்த மகாராஷ்டிர இளைஞரை சில மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து நாம் பார்க்கலாம்.

இந்தியாவில் என்ன சாலை பாதுகாப்பு விதிகள் சிறப்பாக இருந்தாலும் கூட, அவை பேப்பர் அளவில் மட்டுமே உள்ளன. பெரும்பாலான சூழல்களில் பலரும் விதிகளைப் பின்பற்றுவதே இல்லை. இதனால் எல்லாருக்குமே பாதுகாப்பு சிக்கல் ஏற்படுகிறது. அப்படி ஒரு மோசமான சம்பவம் தான் புனேவில் நடந்துள்ளது. காரில் வந்த அந்த இளைஞர் செய்த முகம் சுளிக்க வைக்கும் சம்பவம் பகீர் கிளப்புவதாக இருக்கிறது.

Pune Maharashtra

சிக்னலில் நின்ற சொகுசு கார்

கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இளைஞர் புனேவில் தனது பிஎம்டபிள்யூ காரை ஓட்டி சென்றுள்ளார். ஒரு இடத்தில் டிராபிக் சிக்னலில் காரை நிறுத்திய அவர், அங்கேயே சிறுநீர் கழித்துள்ளார். சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்திய அவர், அது மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதைக் கூட உணரவில்லை. திடீரென சாலைக்கு நடுவே காரை அப்படியே நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்துள்ளார்.. இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் அங்குச் சென்ற ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. வீடியோ எடுப்பதைப் பார்த்த பிறகும் கூட அந்த நபர், பதற்றப்படாமல் ஜாலியாக சிரித்துக் கொண்டே இருந்தார். பொது இடத்தில் முகம் சுளிக்க வைக்கும் இந்த செயலை செய்தவர் கவுரவ் அஹுஜா என அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியதை அடுத்து மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் வைத்து கவுரவ் அஹுஜாவை புனே போலீசார் கைது செய்துள்ளனர்.

இளைஞர் கைது

போலீசார் இப்போது அவரை யெரவாடா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.. சட்ட நடைமுறைகள் முடிந்தவுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.. முன்னதாக, இந்த வீடியோ டிரெண்டான பிறகு, தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு அஹுஜா ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் எட்டு மணி நேரத்திற்குள் சரணடைவதாகவும் கூறியிருந்தார். இருப்பினும், அதற்கு முன்னதாகவே போலீசார் அவரை கைது செய்ததாக தெரிகிறது.

போலீஸ் சொல்வது என்ன

இதற்கிடையில், கவுரவ் சாலைக்கு நடுவே வண்டியை நிறுத்திவிட்டுச் சென்ற போது, சொகுசு காரின் முன் இருக்கையில் இருந்த பாக்யேஷ் ஓஸ்வால் என்ற நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நடந்த போது இருவரும் குடிபோதையில் இருந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் ஓஸ்வால் மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அனுப்பியதாகத் தெரிகிறது.

இது குறித்து போலீஸ் துணை ஆணையர் ஹிம்மத் கூறுகையில், "யெரவாடாவில் உள்ள சாஸ்திரிநகர் சவுக் என்ற பகுதியில் பொது இடத்தில் இளைஞர் சிறுநீர் கழித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம். தேவையான நடவடிக்கைகளை நிச்சயம் எடுப்போம்" என்றார்.

கவுரவ் மீது போலீசார் இப்போது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் பொது மக்களுக்குத் தொந்தரவு அளித்தல், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் பொதுப் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே பல வழக்குகள்

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கவுரவ் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. கிரிக்கெட் சூதாட்டம் உள்ளிட்டவற்றை நடத்தியதாக ஏற்கனவே கவுரவ் மற்றும் அவரது தந்தை மனோஜ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கவுரவ் மீது சூதாட்டம் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த 2021ம் ஆண்டிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+