ஒரே சிம்மில் 60 வங்கி கணக்கு இணைப்பு.. அதிர வைத்த பேங்க் ஆஃப் பரோடா முறைகேடு.. 60 பேர் சஸ்பெண்ட்
மும்பை: பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் 'பாப் வோர்ல்ட்' மொபைல் செயலியில் வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்டதில் நிறைய முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த புகாரில், உதவி பொதுமேலாளர் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் உள்பட சுமார் 60 பேரை வங்கி நிர்வாகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது.
நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்களின் வசதிக்காக 'பாப் வேர்ல்டு' என்ற செல்போன் ஆப்பை அறிமுகப்படுத்தியது. இந்த மொபைல் ஆப்பில் நிறைய வாடிக்கையாளர்களை இணைக்க வேண்டும் என வங்கி தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வங்கி ஊழியர்கள், ஏஜெண்டுகள், நிறைய வாடிக்கையாளர்களிடம் மொபைல் செயலியில் இணைவதற்கான ஒப்புதல் படிவங்களை கொடுத்து மொபைல் எண்களை இணைத்திருக்கிறார்கள்.

இதனிடையே 'பாப் வேர்ல்டு' ஆப்பில் ஆன்போர்டிங் செயல்பாட்டில் ஏகப்பட்ட குறைபாடுகள் உள்ளதாகவும் அந்த மொபைல் ஆப்பில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க வேண்டாம் என்று பேங்க் ஆஃப் பரோடாவுக்கு அக்டோபர் 10ம் தேதி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949ன் பிரிவு 35ஏ வின் கீழ் தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
சில பேங்க் ஆஃப் பரோடா ஊழியர்கள் குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்காக மொபைல் வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அந்நியர்களின் மொபைல் எண்களைப் பயன்படுத்தியதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி இந்த உத்தரவினை பிறப்பித்து இருந்தது.
மேலும் மொபைல் ஆப் வாடிக்கையாளர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
இதனிடையே பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் 'பாப் வோர்ல்ட்' மொபைல் செயலியில் வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்டதில் நிறைய முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், வாடிக்கையாளர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் திருடப்பட்டு பெரும் ஊழல் நடந்துள்ளதாகவும் அல் ஜசீரா ஊடகம் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து பேங்க் ஆஃப் பரோடா வங்கி உடனடியாக அனைத்து துறையிலும் தணிக்கை செய்தது. அப்போதுதான் சில ஏஜெண்டுகள், வாடிக்கையாளர்களை ஏமாற்றி தவறான மொபைல் எண்களையும் இணைத்துள்ளதும், இதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து சுமார் 22 லட்சம் ரூபாய் திருட்டு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 362 வாடிக்கையாளர்களிடம் இதுபோல, தவறான மொபைல் எண்கள் இணைக்கப்பட்டதும். அதில் ஆறு பேர் தலா 1.10 லட்சம் ரூபாய்க்கு மேல் இழந்ததும் தணிக்கையில் உறுதியானது.
பொதுவாக பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஒரு மொபைல் எண்ணுடன் அதிகபட்சம் எட்டு வங்கிக் கணக்குகளை மட்டுமே இணைக்க அனுமதிக்கும். ஆனால் ஒரே மொபைல் எண்ணுடன் சுமார் 10 முதல் 60 வங்கிக் கணக்குகள் வரை இணைக்கப்பட்டுள்ளன. இந்த மொபைல் எண்கள் அனைத்தும் ஏஜெண்டுகளுடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தணிக்கையில் மேலும் பல விவரங்கள் வெளியாகும், பூதாகரமாகும் என்று கூறப்படுகிறது.
இந்த முறைகேடு புகாரில் தொடர்புடைய 60 ஊழியர்களை பேங்க் ஆஃப் பரோடா வங்கியானது பணி இடைநீக்கம் செய்துள்ளது. அதில் 11 பேர் துணை பொது மேலாளர் (AGM) பதவி வகிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணை தீவிரமாக நடப்பதால் எந்த அளவிற்கு முறைகேடு நடந்தது. யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்பது விரைவில் தெரியவரும்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications