லோக்சபா தேர்தலில் சினி ஸ்டார்கள்.. புனே தொகுதியில் மாதுரி தீட்சித்.. பாஜக பலே திட்டம்!
மும்பை : 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பிரபல பாலிவுட் ஸ்டார் மாதுரி தீட்சித்தை புனே தொகுதியில் வேட்பாளராக களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம்.
இந்தாண்டு ஜூன் மாதம், அவரை மும்பையில் உள்ள இல்லத்தில் பாஜக தலைவர் அமித்ஷா சந்தித்து பேசினார். மிகுந்த கவனத்தையும், முக்கியத்துவத்தையும் பெற்ற இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த அமித் ஷா, மத்திய பாஜக அரசின் சாதனைகளை கூறி, ஆதரவு திரட்டினார்.

இந் நிலையில், வரும் லோக்சபா தேர்தலின் போது, புனே தொகுதிக்கு வேட்பாளராக மாதுரி திட்சித்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் முக்கிய பிரமுகர், மாதுரி தீட்சித்தை புனே தொகுதியில் வேட்பாளராக களமிறக்க ஆலோசித்து வருவதாக கூறினார்.
புனே தொகுதியில் அவர் களமிறங்குவது பாதுகாப்பாகவும், வெற்றியை தேடி தருவதாக இருக்கும் என்றும் தெரிவித்தார். வேட்பாளர்களை இறுதி செய்து தேர்ந்தெடுக்கும் பணிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இறுதி பட்டியலில் அவர் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுபோன்று திரை நட்சத்திரங்களை தேர்தலின் போது களமிறக்குவது பாஜகவுக்கு ஒன்றும் புதிய விஷயம் அல்ல என்றும், குஜராத்தில் முதல் முறையாக, நரேந்திர மோடி முதலமைச்சராக போட்டியிட்ட போது இந்த பாணியை தான் கையாண்டார் என்றும் அந்த முக்கிய பிரமுகர் தெரிவித்தார்.
2017ம் ஆண்டு டெல்லி உள்ளாட்சி மன்ற தேர்தலில் இதுபோன்ற அணுகு முறை வெற்றியை கொடுத்ததாகவும், வேட்பாளர்கள் புதியவர்களாகவும், பிரபலமானவர்களாகவும் இருந்தால், கட்சியின் மீதான அதிருப்தி எடுபடாது என்றும் அவர் விளக்கினார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications