நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி.. ஐஸ்வர்யா ராய் நெகட்டிவ்!
மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராயுக்கு செய்யப்பட்ட கொரோனா சோதனையில் முடிவு நெகட்டிவ் என்று வந்துள்ளது.
Recommended Video
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகம் ஆகி வருகிறது. அதிலும் பாலிவுட் பிரபலங்கள் பலர் வசிக்கும் மும்பையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.
இன்றுதான் பாலிவுட் நடிகை ரேகா வீட்டில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வில்லன் நடிகர் பொன்னம்பலத்துக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை.. கமலை அடுத்து ரஜினியும் உதவி!

இருவருக்கு பாதிப்பு
இந்த நிலையில் எம்.பி ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரே வீட்டில் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராய் சோதனை
இன்னும் ஐஸ்வர்யா ராய், ஜெயா பச்சன் கொரோனா சோதனை முடிவுகள் வந்துள்ளது. இரண்டு பேருக்கும் கொரோனா இல்லை என்று உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக அமிதாப் தற்போது டிவிட் செய்துள்ளார். அதில், எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். வீட்டு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

பெரிய பரபரப்பு
இன்னும் முடிவு வரவில்லை. என்னுடன் கடந்த 10 நாட்களாக பழகிய எல்லோரும் உடனே கொரோனா சோதனை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன், என்று அமிதாப் டிவிட் செய்துள்ளார். இதனால் பாலிவுட்டில் பெரிய அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரார்த்தனை
இது தொடர்பாக தற்போது பலரும் பிரார்த்தனை செய்ய தொடங்கி உள்ளனார். அமிதாப் பச்சன் உடனடியாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். உடனே அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எல்லோரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications