Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

60 வயசிலும் சூப்பர் ஸ்டாருக்கு வந்த ல்தகாசைஆ..! 3வது ’துணைவியார்’ இவரா? பூர்வீகம் தமிழ்நாடாமே?

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியா முழுவதும் அறியப்பட்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர்கான் தனது மூன்றாவது காதலியை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். நேற்று மும்பையில் தனது அறுபதாவது பிறந்த நாளை கொண்டாடிய அவர் தனது நீண்ட கால தோழியும் தனது தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்தவருமான கௌரி ஸ்பிராட் உடனான உறவை அறிவித்திருக்கிறார். ஏற்கனவே இரண்டு முறை ஆமீர்கான் விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் ஆமீர் கான். சல்மான் கான், ஷாருக் கான், ஆமீர் கான் உள்ளிட்ட 3 கான் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான இவர் கஜினி, 3 இடியட்ஸ், பிகே, லகான் தூம் 3 உள்ளிட்ட படங்கள் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

entertainment Aamir Khan Gauri Spratt

குறிப்பாக வசூலில் சக்கை போடு போட்ட டங்கல் படத்தின் மூலம் உலக அளவில் பிரபலம் அடைந்தார். இந்தியாவில் வெளியான படங்களிலேயே டங்கல் படம் தான் இதுவரை அதிக வசூலை ஈட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்திய அளவில் அதிக வசூல் செய்த சூப்பர் ஸ்டார் என்றால் அது ஆமீர் கான் தான்.

அதே நேரத்தில் காதல் விவகாரத்திலும் அவர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம் தானே. நீண்ட காலமாக ரீனா தத்தாவுடன் வசித்து வந்த அவர் 2002 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தனிமையில் வசித்து அவர் 2005 ஆம் ஆண்டில் கிரண் ராவ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். 2021 இல் அவரையும் விவாகரத்து செய்த நிலையில் தற்போது நான்கு ஆண்டுகளுக்கு பின் தனது நீண்ட கால காதலியை வெளி உலகத்திற்கு அறிமுகம் செய்திருக்கிறார்.

இரண்டு முறை விவாகரத்து ஆன அமீர்கான் தனது நீண்ட கால தோழியும் தனது தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்தருமான கௌரி ஸ்பாராட்டுடன் தனது உறவை உறுதி செய்து இருக்கிறார். நேற்று தனது அறுபதாவது பிறந்தநாளை கொண்டாடிய ஆமீர் கான் அந்த நிகழ்ச்சிக்கு கௌரியை அழைத்து இருந்தார்.

இதில் சில பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள், பத்திரிக்கையாளர்கள் மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்திருந்த நிலையில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது தான் தனது நீண்ட கால தோழியும் தனது தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் கௌரி ஸ்பிராட் உடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், நானும் கௌரியும் 25 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தோம். இப்போது நாங்கள் இருவரும் பார்ட்னர்களாக இருக்கிறோம். ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சேர்ந்து வாழ்கிறோம் என தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து தம்பதியினருக்கு பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் சிலர் இந்த வயதில் இதெல்லாம் தேவையா என கூறி வருகின்றனர். இந்த நிலையில் எனக்கு லைஃப் பார்ட்னர் தேவைப்பட்டபோது என்னை அன்பாக கவனித்துக் கொள்ள ஜென்டில்மேன் ஒருவர் தேவைப்பட்டார். எனவே தான் அமீர் கானை தேர்ந்தெடுத்தேன் என கூறியிருக்கிறார் கௌரி. கெளரி ஸ்பிரட்டாவின் தாயார் பெங்களூருவில் மிகப்பெரிய அழகு நிலையம் நடத்தி வருகிறார். அவர் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+