அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.. உண்மைச் சரிபார்ப்பு குழு விதி செல்லாது..உயர்நீதிமன்றம் அதிரடி
மும்பை: 2023ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த தகவல் தொழில்நுட்பத் திருத்த விதிகளை செல்லாது என மும்பை உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 20) ரத்து செய்துள்ளது. இந்த விதிகளின் படி தான் உண்மை சரிபார்ப்பு குழுவினை மத்திய அரசு அமைத்திருந்தது. இதன் மூலம் உண்மை சரிபார்ப்பு குழுக்களை அமைக்கும் மத்திய அரசின் சட்டத் திருத்தமும் செல்லாது என்பது மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. இந்த திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது' என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி, மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 இல் திருத்தங்கள் செய்து வெளியிட்டது, இந்த விதிகளின் படி மத்திய அரசை தொடர்புபடுத்தி போலியான தகவல், தவறான தகவல் அல்லது தவறான ஆன்லைன் உள்ளடக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் சார்பில் உண்மை சரிபார்ப்பு குழு (ஃபேக் செக் குழு) அமைக்கப்பட்டது.

FCU என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய அரசின் இந்த உண்மை சரிபார்ப்பு குழு, மத்திய அரசு நிறுவனங்களை பற்றி வரும் போலியான, பொய்யான அல்லது அரசை பற்றி தவறாக வழிநடத்தும் கருத்துக்களை கொண்ட சமூக வலைதள பதிவுகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும். உண்மை சரிபார்ப்பு குழுவின் உத்தரவின்படி, ஆட்சேபைனக்குரிய எந்த ஒரு சமூக வலைதள பதிவுகளையும் சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனம் நீக்க வேண்டும்.. ஒருவேளை மறுப்பு தெரிவித்தால், சட்ட ரீதியாக நடவடிக்கையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது.
ஆனால் தவறான ஆன்லைன் செய்திகளைக் கண்டறிவதற்காக உண்மை சரிபார்ப்பு குழுக்களை உருவாக்குவதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கும் விதி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்த புதிய விதிகளுக்கு எதிராக பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா உள்ளிட்ட பல மனுதாரர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்தத் திருத்தங்கள் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79வது பிரிவின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டவை என்றும், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 14 மற்றும் பிரிவு 19(1)(a)(g)) ஆகியவற்றை மீறுவதாகவும் அவர்கள் வாதிட்டனர்.
இந்த வழக்கை கடந்த 2023ம் ஆண்டு ஜனவரியில் விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கௌதம் படேல் மற்றும் டாக்டர் நீலா கோகாய் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியது. இந்த விவகாரம் மூன்றாவது நீதிபதிக்கு வந்தது. நீதிபதி அதுல் சந்துர்கரின் அமர்வு, இந்தத் திருத்தங்கள் இந்திய அரசியலமைப்பின் 14 மற்றும் பிரிவு 19 ஐ மீறுவதாக கருதுவதாகக் கூறி, சட்டத் திருத்தங்கள் செல்லாது என அறிவித்தார். அதாவது தவறான ஆன்லைன் செய்திகளைக் கண்டறிவதற்காக உண்மை சரிபார்ப்பு குழுக்களை உருவாக்குவதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கும் விதி செல்லாது என மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி அதுல் சந்துர்கர் தீர்ப்பளித்துள்ளார்.
இது பற்றி தீர்ப்பில் கூறிய நீதிபதி, "இந்த விஷயத்தை நான் மிகவும் விரிவாகப் பரிசீலித்தேன். இந்திய அரசியலமைப்பின் 14 (சமத்துவத்திற்கான உரிமை), 19 (பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்) மற்றும் 19 (1) (ஜி) (சுதந்திரம் மற்றும் தொழில் உரிமை) ஆகியவற்றை மீறும் வகையில் விதிகள் உள்ளன. இத விதிகளில் உள்ள "போலியான, தவறான மற்றும் தவறாக வழிநடத்தும் தகவல்" என்ற வார்த்தை பதங்கள் என்பது ஒரு வரையறை இல்லாத நிலையில் இருக்கிறது. இந்த விதி தெளிவற்றதாகவும் தவறானதாகவும் உள்ளது" என்று கூறியுள்ளார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications