ஒப்புதலுடன் உடலுறவு கொள்ள அனுமதிக்கும் வயதை 18லிருந்து குறைக்க பரிசீலனை செய்யுங்கள்: மும்பை ஹைகோர்ட்
மும்பை: இந்தியாவில் ஒப்புதலுடன் உடலுறவு கொள்ள அனுமதிக்கும் வயதை 18 ல் இருந்து குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் 17 வயது சிறுமியுடன் உறவு வைத்ததாக கூறி போக்சோ வழக்கில் 10 ஆண்டு சிறை பெற்றவரின் தண்டனையை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் பலாத்கார சம்பவங்களை தடுக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எதிரான பாலியல் தொல்லை விவகாரத்தில் போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்கின்றனர்.

அதன்பிறகு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்று கொடுக்கின்றனர். அந்த வகையில் தான் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 25 வயது வாலிபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அதாவது இந்த வாலிபர் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட வாலிபருக்கு 10 ஆண்டு சிறை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பானது கடந்த 2019 ம் ஆண்டில் வழங்கப்பட்டது.
இந்த கீழமை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அந்த வாலிபர் சார்பில் மும்பையில் உள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி பாரதி டாங்ரேவின் அமர்வு விசாரித்தது. இவர் வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அப்போது சிறுமியும், வாலிபரும் பரஸ்பர சம்மதத்துடன் உறவு வைத்துள்ளது உறுதியானதை தொடர்ந்து வாலிபருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.
மேலும் இந்த தீர்ப்பின்போது நீதிபதி பாரதி டாங்ரே சில முக்கிய விஷயத்தை கூறினார். அதாவது இந்தியாவில் ஒப்புதலுடன் உடலுறவு கொள்ள அனுமதிக்கும் வயதை 18 ல் இருந்து குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என கூறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றம் கூறியதாவது:
இந்தியாவில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் டீன் ஏஜில் இருக்கும் நிலையில் உறவு வைக்கும் ஆண்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். சில வேளைகளில் பரஸ்பர சம்மத்துடன் உறவு வைத்தாலும் கூட கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதனால் ஒவ்வொருவரும் தங்களின் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் காதல் உறவுகள் என்பது நீதித்துறை மற்றும் காவல்துறை அமைப்புகளில் அதிக சுமையை ஏற்படுத்தி உள்ளன. ஏனென்றால் குற்றம்சாட்டப்பட்டவர் மீதான குற்றத்தை புகார்தாரர் தரப்பில் இருந்து நிரூபிக்க மறுக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட அந்த நபர் விடுதலை செய்யப்படுகிறார். இதன்மூலம் நீதித்துறை, காவல்துறையின் நேரங்கள் வீணடிக்கப்படுகிறது.
அதேவேளையில் பாலியல் உரிமை என்பது விருப்பத்துடன் உறவு வைத்து கொள்வதை அனுமதிப்பதையும், பாலியல் தொல்லைகளில் இருந்து ஒருவர் தன்னை பாதுகாத்து கொள்வதற்கும் இடமளிக்க வேண்டும். இது இரண்டும் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும். இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு எதிரான பாலியல் புகார்களுக்கு போக்சோ வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த போக்சோ சட்டம் என்பது பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கிறது.
இருப்பினும் இந்த குறிப்பிட்ட வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுவிக்கப்படுகிறார். ஏனென்றால் இந்து உறவு என்பது சம்மதத்துடன் நடந்துள்ளது. அதோடு பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணுக்கு 17 வயது ஆகிறது. இது முஸ்லிம் தனிச்சட்டத்தின்படி பார்த்தால் திருமண வயதாக இருக்கிறது. அதோடு இருவரின் சம்மதத்துடன் இந்த உறவு நடந்துள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.
ஆனாலும் உலகில் நடக்கும் சம்பவங்களை நாமும், நாடாளுமன்றமும் அறிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துள்ளது. ஏனென்றால் பல நாடுகளில் இருவர் சம்மதத்துடன் உடலுறவு கொள்ளும் வயது என்பது குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வயது இந்தியாவில் 18 ஆக உள்ளது. உலகிலேயே இந்தியாவில் தான் இந்த வயது அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என நினைக்கிறேன். ஏனென்றால் பல நாடுகளில் அதற்கான வயது வரம்பு 14 முதல் 16 என்ற அளவில் தான் உள்ளது. இதனால் ஒப்புதலுடன் உடலுறவு கொள்ளும் வயதை 18 ல் இருந்து குறைக்க நாடாளுமன்றம் பரிசீலனை செய்ய வேண்டும்'' என தெரிவித்தார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications