மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்!

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் உள்ள 3 மாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பலியாகி உள்ளனர். நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

மும்பையில் உள்ள அப்துல் ஹாமித் சாலை அருகே இருக்கும் புதிய ஆட்சியர் அலுவலகம் அருகே இந்த கட்டிடம் இருந்தது. 3 அடுக்கு மாடி கொண்ட இந்த கட்டிடத்தின் இரண்டு மாடிகள் இடிந்து, அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது.

8 அடி ராஜநாகம்கூட இவருக்கு ஜுஜுபி தான்.. லாவகமாக பாம்பு பிடித்து அசத்தும் ஒடிசா பெண்!8 அடி ராஜநாகம்கூட இவருக்கு ஜுஜுபி தான்.. லாவகமாக பாம்பு பிடித்து அசத்தும் ஒடிசா பெண்!

இந்த பகுதியில்தான் சில நாட்களுக்கு முன் டவ் தே புயல் தாக்கியது. இதில் பல குடியிருப்பு பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து சில அடுக்குமாடி கட்டிடங்கள் வாழ தகுதியற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டன. ஆனால் இந்த கட்டிடம் அப்படி அறிவிக்கப்படவில்லை.

 கட்டிடம்

கட்டிடம்

ஆனால் இந்த கட்டிடம் கடந்த இரண்டு நாட்களாக லேசாக குலுங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு இந்த கட்டிடம் விழுந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சி இந்த கட்டிடம் நன்றாக இருப்பதாக சான்றிதழ் கொடுத்த ஒரே காரணத்தால் மட்டுமே இங்கு மக்கள் வசித்தனர்.

குடும்பம்

குடும்பம்

ஆனாலும் இரண்டு குடும்பங்கள் அச்சம் காரணமாக இங்கிருந்து கடந்த 4 நாட்களுக்கு முன் வெளியேறி உள்ளன. அங்கு மூன்றாவது மாடியில் இருந்த குடும்பத்தினர்தான் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். மொத்தம் அந்த குடும்பத்தில் 11 பேர் இருந்த நிலையில் 9 பேர் பலியாகி உள்ளனர்.

மரணம்

மரணம்

இதில் வீட்டின் தலைவர் முகமது ரபி வீட்டை விட்டு வெளியே பால் வாங்க சென்றதால், விபத்தில் சிக்கவில்லை. அவரின் ஒரு மகன் கடைக்கு மருந்து வாங்க சென்றதால் அவரும் விபத்தில் சிக்கவில்லை. மற்றபடி வீட்டில் இருந்த மனைவி, மற்ற 8 குழந்தைகள் உட்பட 9 பேர் இந்த விபத்தில் பலியாகி உள்ளனர்.

 பால்

பால்

நேற்று இரவு பால் வாங்க சென்று திரும்பி வரும் 30 நிமிட இடைவெளியில் மொத்த வீடும் இடிந்து, வீட்டில் இருந்த எல்லோரும் இப்படி பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு குடும்பமே இப்படி விபத்தில் மரித்தது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் 9 பேருக்கும் தலா 5 லட்சம் நிவாரணம் மகாராஷ்டிரா அரசு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Building Collapse accident in Mumbai kills 9 people including 8 kids from the same family, only 2 left in the family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X