"உடலுறவு" மனைவியுடன் மட்டுமா? ம்ஹூம், முடியாது.. கோர்ட்டுக்கு ஓடிய கணவன்.. ஜட்ஜ் சொன்னதை பாருங்களேன்
மும்பை: மிகவும் சிக்கலான அதே சமயம் கவலைப்பட வேண்டிய வழக்கு ஒன்று நீதிமன்றம் சென்றுள்ளது.. இதுகுறித்து மும்பை ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவானது, பலரையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் அந்த பெண்.. 26 வயதாகிறது.. இவருக்கு சில மாதங்களுக்கு முன்புதான் கல்யாணம் நடந்துள்ளது.. ஆனால் அதற்குள் விவாகரத்து கோரி கோர்ட்டுக்கு சென்றுள்ளார். குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது:

தாம்பத்யம்: "கடந்த 2023-ம் ஆண்டு எனக்கு திருணம் நடந்தது.. ஆனால், வெறும் 17 நாட்களிலேயே என்னுடைய கணவரை பிரிந்து விட்டேன்.. காரணம், என்னுடைய கணவர் தாம்பத்திய உறவில் ஈடுபட மறுத்துவிட்டார்... கணவருக்கு என்னுடன் உறவு கொள்வதில் விருப்பமில்லை.. இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் 2 பேராலும் ஒன்றிணைய முடியவில்லை" என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த பெண்ணின் 27 வயது கணவர் பதில் மனு தாக்கல் செய்தார்.. அந்த மனுவில் கணவர் சொன்னதாவது:
மனைவி: "என் மனைவி சொல்வது உண்மைதான்.. ஆனால், என்னுடைய மனைவியுடன் மட்டுமே என்னால் தாம்பத்தியம் கொள்ள முடியவில்லை... மற்றபடி எனக்கு உடலில் எந்த குறைபாடும் இல்லை.. என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுவதை விரும்பவில்லை.." என்று விளக்கம் தந்தார்..
இருவரது வழக்கையும் விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், விவாகரத்து கோரிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது.. இதனால் அதிருப்திக்கு உள்ளான அந்த நபர், மும்பை உயர்நீதிமன்ற அவுரங்காபாத் அமர்வு கோர்ட்டில் அப்பீல் செய்தார்..
விசாரணை: இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது: "இந்த வழக்கு ஒரு வித்தியாசமான வழக்கு.. கல்யாணத்துக்கு பிறகு மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ ஒன்றிணைய முடியாத இளம் தலைமுறையினருக்கு இது ஒரு எடுத்துக்காட்டான வழக்கு...
குறிப்பிட்ட ஒரு நபருடன் மட்டும் உடலுறவு கொள்ள முடியவில்லை என்பது பொதுவான ஆண்மை குறைவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது... ஒரு நபர் உடலுறவு கொள்ளும் திறன் கொண்டவராக இருந்தாலும், மனைவியுடன் அதை செய்ய இயலாத சூழ்நிலையில்தான் இப்படியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன..
பிரச்சனைகள்: இந்த பிரச்சினைக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.. உடல் ரீதியான மற்றும் மன ரீதியான காரணங்களும் இருக்கலாம். ஆனால், இந்த வழக்கில் கணவருக்கு மனைவியுடன் உறவு கொள்வதில் நாட்டம் ஏற்படவில்லை என்றே தெரியவருகிறது.. இதை அந்த கணவரும் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, இவர்களின் திருமணம் பூர்த்தியாகவில்லை. இந்த இளம் ஜோடி எதிர்கொண்டு வரும் விரக்தியை நாம் புறக்கணிக்கவும் முடியாது
சிலருக்கு, "இம்போடென்சி" எனப்படும் ஆண்மை இல்லாமல் இருக்கும். ஆனால், இந்த வழக்கில், அந்த கணவருக்கு, "ரிலேட்டிவ் இம்போடென்சி" எனப்படும் உடல் ரீதியாக இணைந்து வாழ்வதற்கு தயக்கம் உள்ளது. அதாவது, இது போன்றவர்கள், சாதாரணமானவர்களாக இருப்பார்கள்.. ஆனால், மனைவியுடன் மட்டும் உடலுறவில் ஈடுபட தயக்கம் காட்டுவார்கள்.
ஆண்மையில்லாதவர்: தன்னை ஆண்மையில்லாதவன் என்று மனைவி கூறிவிடுவரோ என்ற பயத்தில், இந்த கணவர், தன் மனைவி மீதே குற்றஞ்சாட்டியிருக்கிறார். இளம் தம்பதியினர் இடையே, மனதளவில், உணர்வளவில் மற்றும் உடலளவில் இணைந்து வாழ்வதில் பல பிரச்சனைகளை அதிகமாகவே சந்தித்து வருகிறார்கள்.
இது குடும்ப மற்றும் தாம்பத்திய வாழ்க்கையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். அதனால்தான், எத்தனையோ பேர், கல்யாணம் செய்து கொள்வதற்கே பயப்படுகிறார்கள்.. இதற்கு உளவு ரீதியில் விடை காணப்பட வேண்டும்" என்று கூறிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட தம்பதிக்கு விவாகரத்து வழங்கியும் உத்தரவிட்டனர்... இதையடுத்து இந்த வழக்கும் முடிவுக்கு வந்தது.
பரபரப்ப்பு: இளம் தம்பதியினர் இடையே மனதளவில், உணர்வளவில் மற்றும் உடலளவில் இணைவதில் தயக்கம் உள்ளது, திருமண உறவில் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாக மும்பை ஹைகோர்ட் எச்சரிக்கை விடுத்திருப்பது, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications