சர்வீஸ் சார்ஜ் வசூலித்த உணவகத்துக்கு ‛ஆப்பு'.. ரூ.50 ஆயிரம் போச்சே.. வாடிக்கையாளர் செய்த சம்பவம்
மும்பை: மும்பையைச் சேர்ந்த 'சைனா கேட் ரெஸ்டாரன்ட் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ. 50,000 அபராதம் விதித்துள்ளது. 'போரா போரோ' உணவகத்தை நடத்தி வரும் இந்த நிறுவனம், வாடிக்கையாளர்களின் பில்களில் கட்டாயமாக சர்வீஸ் சார்ஜ் வசூலித்த நிலையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையை சேர்ந்த ஒருவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பையைச் சேர்ந்த 'சைனா கேட் ரெஸ்டாரன்ட் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்திற்கு சொந்தமான ‛போரா போரா' உணவகத்துக்கு சென்று உணவு சாப்பிட்டார்.

அப்போது அவருக்கு பில் கட்டணமாக ரூ.624 வழங்கப்பட்டது. உணவின் விலை, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றுடன் சர்வீஸ் சார்ஜ் 10 சதவீதம் வரை சேர்க்கப்பட்டது. உணவகங்களில் சர்வீஸ் சார்ஜ் செய்யக்கூடாது என்று நீதிமன்றங்கள் பலமுறை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் உணவகத்தில் சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்பட்டது.
இதனால் அந்த நபர் சர்வீஸ் சார்ஜை நீக்கும்படி கூறினார். ஆனால் உணவகம் மறுத்துவிட்டது. மேலும் சர்வீஸ் சாரஜ் கட்டணத்தை அவரிடம் இருந்து வசூலித்தது. இதுதொடர்பாக அந்த நபர் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில் ஒரு புகார் அளித்தார். அதன்மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
விசாரணையின்போது சர்வீஸ் சார்ஜ் விதிக்கப்பட்ட பில் ஆதாரமாக வழங்கப்பட்டது. இதன்மூலம் வாடிக்கையாளர் சொல்வது உண்மை என்றும், அந்த உணவகம் சர்வீஸ் சார்ஜை கட்டாயப்படுத்தி வசூலிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த உணவகத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.
முன்னதாக, ரெஸ்டாரண்ட்டுகளில் சர்வீஸ் சார்ஜ் வசூலிக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் வழிக்காட்டுதல்களை வழங்கியது. ஆனால் அதனை மீறி சர்வீஸ் சார்ஜை ரெஸ்டாரண்ட் வசூலித்ததாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகளில் சர்வீஸ் சார்ஜ் தனியாக வசூலிக்கும் பட்சத்தில் பொதுமக்கள் அதற்கு எதிராக முறையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications