'பெரிய வேலையா பார்த்துவிட்டு போய்டானே'.. சிறுவனிடம் சிக்கிய சிறுத்தை.. புத்திசாலித்தனத்தை பாருங்க
மும்பை: திருமண மண்டபத்தில் சிறுத்தை புகுந்துவிட்ட நிலையில், அதை சமார்த்தியமாக கையாண்ட சிறுவன், எந்தவித பதற்றமும் இல்லாமல், உடனே எழுந்த சிறுத்தையை உள்ளே வைத்து கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டான். இது தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், பலரும் சிறுவனின் புத்திசாலித்தனத்தை பாராட்டி உள்ளனர்..
சிறுத்தையை கண்ணில் பார்த்தால் பலர் பதற்றம் அடைந்த கத்தி தங்களை தாங்களே காட்டிக் கொடுத்துவிடுவார்கள்.. சிறுத்தை முன்பு கத்தினால், அது உடனே சுதாரித்து தாக்க தொடங்கிவிடும். மற்ற எல்லா வன விலங்குகளையும் விட மோசமான விலங்கு சிறுத்தை.. ஆக்ரோஷமாக தாக்கும் என்பதால் அந்த விலங்கிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

பொதுவாக சிறுத்தைகள் காட்டில் தான் வாழ்பவை.. அவ்வளவு எளிதில் ஊருக்கள் வர விரும்பாது. அதேநேரம் இறைக்காக மட்டுமே சில நேரங்களில் வரும்.. அப்படி வரும் சிறுத்தை நாய், மாடு உள்ளிட்ட விலங்குகளை தாக்கி இழுத்து செல்ல முயற்சிக்கும். சில நேரங்களில் மனிதர்களை தாக்கி கொல்லும்..
இதனால் சிறுத்தையை கண்டு ஊரே அலறும்... சிறுவனின் செயலால் சிறுத்தையே அரண்டு போய் இருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் திருமண மண்டபம் ஒன்று இருக்கிறது. அங்கு காவலாளியாக வேலை செய்பவரின் 12 வயது மகன், இன்று காலை வரவேற்பு அறையில் அமர்ந்தபடி, செல்போனில் ஹேம் விளையாடிக் கொண்டிருந்தான்..
Leopard suddenly entered a house in Malegaon, Maharashtra, the child showed wisdom and locked the leopard in the house, the entire incident was captured in CCTV.#Malegaon #Maharashtra #ViralVideo #Leopard pic.twitter.com/hnjBngcKLd
— Siraj Noorani (@sirajnoorani) March 6, 2024
அப்போது மண்டபத்தின் பிரதான கதவு திறந்திருந்த நிலையில், சிறுத்தை ஒன்று சிறுவன் அமர்ந்திருந்த அறைக்குள் நுழைந்ததது. சிறுவன் அமர்ந்திருப்பதை சிறுத்தை பார்க்காமல் உள்ளே கடந்து சென்றது. அப்போது சிறுத்தை கடந்து உள்ளே செல்வதை பார்த்த சிறுவன் , எந்தவித பதற்றமும் இல்லாமல், உடனடியாக நகர்ந்து சென்றான். விளையாடிக்கொண்டிருந்த செல்போனையும் எடுத்துக்கொண்டான்..
சட்டென சத்தமே இல்லாமல் கதவை சாத்திவிட்டு ஓடிவிட்டான். இதனால் சிறுத்தை மண்டபத்திற்குள் சிக்கி கொண்டது. இதுபற்றி தனது தந்தையிடம் கூறிய சிறுவன், தந்தை மூலமாக வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தான். இதனால் விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் உள்ளூர் போலீசார், சிறுத்தையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். மகாராஷ்டிரா சிறுவனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications