இது நம்ம ஆளு.... மகா. அரசுடன் மோதும் நடிகை கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு தந்த பாஜக அரசு
மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரண வழக்கில் மகாராஷ்டிரா அரசுடன் மல்லுக்கட்டி வரும் நடிகை கங்கனா ரனாவத்துக்கு மத்திய பாஜக அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 24-ந் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

களத்தில் கங்கனா
சுஷாந்த் சிங் மரண வழக்கில் தொடக்கம் முதலே மகாராஷ்டிரா அரசுக்கும் பீகார் அரசுக்கும் மோதல் இருந்தது. இந்த நிலையில் சுஷாந்த் சிங் மரணத்தை முன்வைத்து நடிகை கங்கனா ரனாவத் பல பகீர் குண்டுகளை வீசினார்.

போதைப் பொருளும் பாலிவுட்டும்
பாலிவுட் விருந்துகளில் கொக்கைன் போதைப் பொருள்தான் பிரதானம்... பார்ட்டிகளில் போதைப் பொருள் கலந்துதான் கொடுப்பார்கள். பாலிவுட்டுக்குள் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நுழைந்தால் பல டாப் ஹீரோக்கள் கம்பி எண்ணுவார்கள் என அதிரடியாக ட்வீடர் போட்டார் கங்கனா. இதனையடுத்து பாலிவுட் பக்கம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இறங்கி வேட்டையாடி வருகின்றனர்.

மகா. அரசுடன் மோதல்
அத்துடன் மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கங்கனா ரனாவத் குறித்து அதன் ஆசிரியர் சஞ்சய் ராவத் காட்டமாக எழுதினார். இதற்கு பதில் தந்த கங்கனா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல மும்பை இருக்கிறது என பொளேர் பதிவிட்டார். இதனால் சிவசேனா மகளிர் அணியினர் போராட்ட களத்தில் குதித்தனர். உடனே மகாராஷ்டிரா அமைச்சர் அனில்தேஷ்முக், கங்கனா மகாராஷ்டிராவில் வாழ உரிமை இல்லாதவர் என்றார்.

ஒய் பிளஸ் பாதுகாப்பு
இந்த நிலையில்தான் மகாராஷ்டிராவும் மும்பையும் உங்க சொத்து இல்லை- நான் மும்பைக்கு 9-ந் தேதி வருகிறேன்.. என்ன செய்வீர்கள் என எகிறினார் கங்கனா ரனாவத். இதனையடுத்தே தற்போது கங்கனா ரனாவத்துக்கு தற்போது மத்திய அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications