ஷாருக்கான் கொலை மிரட்டல் விவகாரம்.. போலீஸையே குழப்பி விபூதி அடித்த நபர் அதிரடி கைது
மும்பை: மகாராஷ்டிரா தேர்தல் களம், பாலிவுட் உச்ச நடிகர்களுக்கு அடுத்தடுத்து கொலை மிரட்டல் என மாநிலமே அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே நடிகர் சல்மான் கானுக்கு பல கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், ஷாருக்கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, கொலை மிரட்டல் விடுத்த நபரை சத்தீஸ்கரில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்ரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலைக்கு பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் டீம் பொறுப்பேற்றது. பாபா சித்திக் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வருகிற நவம்பர் 20 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

பாபா சித்திக் பாலிவுட் பிரபலங்கள் பலருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நிலையில், பாபா சித்திக் கொலை மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமா வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக நடிகர் சல்மானுடன் பாபா சித்திக் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.
இந்த நிலையிஸ், சல்மான் கானுடன் யார் நெருக்கமாக இருந்தாலும் இதே நிலைதான் என லாரன்ஸ் பிஷ்னோய் டீம் பகீரங்கமாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். பாபா சித்திக் கொலையை தொடர்ந்து சல்மான் கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனால் சல்மான் கானுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பாபா சித்திக் சல்மான் கானுடன் மட்டுமல்லாமல் ஷாருக்கானுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். சிறு சிறு பிரச்னை காரணமாக சல்மான்கானும் ஷாருக்கானும் கொஞ்ச காலம் பேசாமல் இருந்தபோது கூட அவர்கள் இருவரையும் பாபா சித்திக் தான் இணைத்து வைத்தார். சல்மான்கானிடம் பணம் கேட்டு மிரட்டியதைத் தொடர்ந்து ஷாருக்கானிடமும் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம நபர் ஒருவர் ஷாருக்கானுக்கு தொலைபேசியில் அழைத்து ரூ. 50 லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மும்பை பந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியது. போலீஸ் விசாரணையில், ஷாருக்கானுக்கு சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, பந்த்ரா காவல் துறை, மும்பை சைபர் க்ரைம் போலீஸ், சத்தீஸ்கர் காவல் துறை இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ராய்பூரைச் சேர்ந்த முகமது ஃபைசன்கான் என்பவரின் செல்பானில் இருந்துதான் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மும்பை காவல் துறை ஃபைசன்கானுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அந்த நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியது. இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், வழக்கறிஞர் ஃபைசன்கான் என்பவரின் தொலைபேசி எண்ணில் இருந்து நவம்பர் 5 ஆம் தேதி ஷாருக்கானுக்கு அவரின் செல்போனில் இருந்து பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
ஆனால், அவர் நவம்பர் 2 ஆம் தேதியே தன்னுடைய செல்போனை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதுகுறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றனர். ராய்பூர் சென்ற மும்பை காவல்துறை ஃபைசன்கானிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஃபைசன்கான், என் செல்போன் தொலைந்துவிட்டது.
ஷாருக்கானுக்கு யார் மிரட்டல் விடுத்தார்கள் என தெரியவில்லை. என்னுடைய செல்போனில் உள்ள சிம்கார்டும், வாட்ஸ் அப் எண்ணும் வேறு வேறு. எனவே காவல்துறை இரண்டு எண்களையும் முறையாக விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்நிலையில், போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ஃபைசான் கானை இன்று அதிகாலை ராய்ப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications