ஒரே நொடி.. ரூ.368 கோடி போச்சு! இந்தியாவின் பிரபல கிரிப்டோ தளத்தில் அதிகாலை நடந்த ஹேக்கிங்!
டெல்லி: இந்தியாவில் கிரிப்டோ முதலீடுகள் மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஐடி வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் தான் கிரிப்டோவில் அதிகம் முதலீடு செய்கிறார்கள். இதற்கிடையே இந்தியாவின் முன்னணி கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான காயின்டிசிஎக்ஸ் (CoinDCX) தளம் இப்போது மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 44 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 368 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே கிரிப்டோ முதலீடு மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. குறிப்பாகக் கொரோனா காலகட்டத்தில் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்ட நிலையில், மக்கள் கிரிப்டோ பக்கம் திரும்பினர். ஐடி வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் கிரிப்டோவில் அதிகம் முதலீடு செய்ய ஆரம்பித்தனர்.

கிரிப்டோ தளம் ஹேக்
இந்தியாவில் கிரிப்டோ முதலீடுகளுக்குக் கட்டுப்பாடுகள் இருக்கும் போதிலும் அதையும் தாண்டி இளைஞர்கள் முதலீடு செய்தே வருகிறார்கள். இதற்கிடையே கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், நாட்டின் முன்னணி கிரிப்டோ தளங்களில் ஒன்றான காயின்டிசிஎக்ஸ் இப்போது மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் ஒரே நொடியில் 44 மில்லியன் டாலர் மாயமாகியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.368 கோடி ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதைச் சம்பந்தப்பட்ட நிறுவனம் உறுதி செய்துள்ளது. சனிக்கிழமை அதிகாலையில் இந்த ஹேக்கிங் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நிறுவனத்தின் உள் செயல்பாட்டுக் கணக்குகளில் ஒன்றைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காயின்டிசிஎக்ஸ் விளக்கம்
பயனர்களின் தனிப்பட்ட நிதிகள் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதாக காயின்டிசிஎக்ஸ் தெரிவித்துள்ளது. அதாவது ஹேக் செய்யப்பட்ட கணக்கு என்பது கம்பெனிக்கு செயல்பாட்டுக் கணக்குகளில் ஒன்று தான் என்றும் அதில் வாடிக்கையாளர்களின் கிரிப்டோ எதுவும் சேமித்து வைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது!
ஒரு அதிநவீன சர்வர் ஊடுருவல் காரணமாக இந்த குறிப்பிட்ட கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகச் சம்பவம் காயின்டிசிஎக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் சுமித் குப்தா தெரிவித்துள்ளார். மேலும், இந்த இழப்புகளை ஈடுசெய்ய நிறுவனத்தின் கையிருப்பில் போதுமான நிதி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஹேக்கிங் உறுதியான உடனேயே காயின்டிசிஎக்ஸ் தளத்தில் வர்த்தகம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகே அது மீண்டும் செயல்பாட்டிற்கு வந்து.
இந்தச் சம்பவத்தால் மக்கள் பயந்து தங்கள் கிரிப்டோ முதலீடுகளை விற்க வேண்டாம் என்றும் சுமித் குப்தா அறிவுறுத்தியுள்ளார். இதுபோல அவசர அவசரமாக கிரிப்டோவை விற்றால் அது விலை சரிவுக்குக் காரணமாக இருக்கும் என்றும் இழப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். சந்தை நார்மல் ஆகும் வரை காத்திருப்பதே சரியான தீர்வு என்றும் அவர் அறிவுறுத்தினார்.
சைபர் வல்லுநர்கள்
மேலும், நிறுவனத்தின் உள் பாதுகாப்புக் குழு சர்வதேச சைபர் பாதுகாப்பு வல்லுநர்களுடன் இணைந்து இது குறித்து விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்புகளைச் சரிசெய்து, திருடப்பட்ட நிதியைக் கண்டுபிடிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காயின்டிசிஎக்ஸ் தெரிவித்துள்ளது.
அதேநேரம் இந்தியாவில் ஒரு பெரிய கிரிப்டோ தளம் ஹேக் செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, வாஜிர்எக்ஸ் (WazirX) நிறுவனத்தில் மிகப் பெரிய ஹேக் நடந்தது. அதில் சுமார் 230 மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோ ஹேக் செய்யப்பட்டது.
-
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு! -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு












Click it and Unblock the Notifications