திணறும் தாராவி.. ஆபத்தை விளைவிக்கும் டாய்லெட்டுகள்.. கொரோனாவுக்கு 5 பேர் பலி.. பீதியில் தமிழர்கள்
தாராவியில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது
மும்பை: தாராவியில் அடுத்தடுத்து உயிர் பலி பீதியை கிளப்பி விட்டு வருகிறது.. ஆசியாவிலேயே பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர்.. லட்சக்கணக்கான தமிழர்கள் வாழும் தாராவியில் இன்னும்கூட தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.!!
Recommended Video
மெல்ல மெல்ல ஊடுருவிய வைரஸ் இன்று நம் நாட்டில் 8,500-க்கும் மேற்பட்டோரை பீடித்துள்ளது.. இந்திய மாநிலங்களிலேயே அதிக பாதிப்புடைய மாநிலமாக மகாராஷ்டிரா கருதப்படுகிறது.. கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிப்புகளும், உயரிழப்புகளும் அதிகமாகி வருகின்றன!
குறிப்பாக தாராவிதான் மக்களை திணறவைத்து வருகிறது.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளது.. உயிரிழப்பும் 5ஐ கடந்துள்ளது

தாராவி
ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதிதான் தாராவி.. மிகவும் நெருக்கமான பகுதி.. நெரிசலான மும்பையின் மையத்தில் உள்ளது தாராவி.. ஆயிரக்கணக்கான தமிழர்கள் இங்கு வசித்து வருகின்றனர்.. ஸ்லம் பகுதி என்றாலே அது தாராவிதான். இவர்களில் நிறைய பேர் கல்வி அறிவு பெற்றிருந்தாலும், கூலி தொழில்தான் பிரதானம்.

வரலாறுகள்
எந்த தொற்று ஏற்பட்டாலும் அது கட்டாயம் தாராவியை தொட்டுவிட்டுதான் செல்லும்.. அதனாலேயே ஏராளமானோர் இங்கு இறந்து போன வரலாறுகளும் உண்டு. அந்த வகையில் இந்த வைரஸும் தாராவியை பாதித்துள்ளது.. நெரிசல் மிக்க பகுதி என்பதால் சமூக விலகல் கேள்விக்குறிதான்.. கொரோனா பரவ தொடங்கியது என்றதுமே அரசு முதலில் கவனம் செலுத்தியது தாராவியில்தான்.. அதனால்தான் பலி எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.

5 பேர் பலி
55 வயதான நபர் ஒருவர்தான் முதல் பலி.. ஆனால் இவருக்கு தொற்று எங்கு, எப்படி, எதன்மூலம் பரவியது என்பது தெரியவில்லை. 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிர்பலியை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிரமான நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. எனினும் பொதுமக்கள் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.. போதுமான பயம் இன்னும் வரவில்லை என்கிறார்கள், நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறாம்.. இது சமூக ஆர்வலர்களை கவலை கொள்ள செய்துள்ளது.

தொற்று அபாயம்
இது எல்லாவற்றிற்கும் மேலாக தாராவி பற்றின கவலை என்னவென்றால், இங்கு பொதுக்கழிப்பறை நிறைய பயன்படுத்துவதாக சொல்கிறார்கள்.. கிட்டத்தட்ட 600 பேருக்கு ஒரே பாத்ரூம்தானாம்.. இந்த பொதுக்கழிப்பறை மூலமாகவும் வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.. பாத்ரூமில் பக்கெட்கள், கைப்பிடிகள், கதவுகளில் வைரஸ் தொற்று இருக்கும் என்கிறார்கள்.. அதனால் கைகளை சுத்தமாக கழுவ அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். லட்சணக்கான மக்கள் வசிக்கும் இப்பகுதியில் வீடு வீடாக சென்று டெஸ்ட்கள் மேற்கொள்ளப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கோரிக்கை
இப்போதைக்கு மெடிக்கல்ஷாப் தவிர மற்ற எல்லா கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எப்படியாவது அங்குள்ள தமிழர்கள் அனைவருமே நலன் பெற வேண்டும் என்றும், அதற்கான சுகாதார, மற்றம் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. எனினும் நெருக்கமான வீடுகள், குறைவான சுகாதாரம், ஏராளமான பாதிப்புகளில் சிக்கி திணறி வருகிறது தாராவி!!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications