இந்தியா முழுவதும் ஆணுறை விற்பனை திடீரென தாருமாறாக அதிகரிப்பு.. ஆச்சர்யமளிக்கும் விவரங்கள்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மக்கள் வீடுகளிலேயே அதிக நேரம் இருப்பதால் ஆணுறை விற்பனை இந்தியா முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை போல் ஆணுறை விற்பனையும் மிக மிக அதிக அளவு அதிகரித்துள்ளது.

Recommended Video

    இந்திய மக்களுக்கு இலக்கியா தரும் செய்தி

    கொரோனா வைரஸ் பரவும் வேகம் மக்களிடையே வேண்டிய அனைத்தையும் வாங்கி தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற அச்சம் உணர்வு அதிகரித்துள்ளது.

    உலகம் முழுவதும் பரவுவதால் மக்கள் தங்களால் முடிநத் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமித்து வைக்கின்றனர். இந்த மாத இறுதி வரை ஜிம், பார்க் மற்றும் தியேட்டர்கள் போன்ற பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை.

    50 சதவீதம் அதிகரிப்பு

    50 சதவீதம் அதிகரிப்பு

    அத்துடன் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பதால், மக்கள் உணவு மற்றும் சுகாதார பொருட்களை வாங்கி சேமிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் ஆணுறை விற்பனை பிய்த்துக்கொண்டு செல்கிறது. பல சில்லறை விற்பனை கடைகளில் கடந்த ஒரு வாரத்தில் விற்பனை கிட்டத்தட்ட 25% முதல் 50% வரை அதிகரித்துள்ளது.

    10 பேக் வாங்குகிறார்கள்

    10 பேக் வாங்குகிறார்கள்

    இது தொடர்பாக தென் மும்பையில் உள்ள ஒரு மருத்துவ கடை உரிமையாளர் ஹர்ஷல் ஷா கூறுகையில், 'மக்களுக்கு இப்போது நிறைய நேரம் இருக்கிறது, அவர்கள் வீட்டில் இருப்பதால் சலிப்படைகிறார்கள். பொதுவாக, மக்கள் சிறிய அளவிலான ஆணுறை பேக்குகளையே விரும்பி வாங்குவார்கள். ஆனால் இப்போது பெரிய பெரிய ஆணுறை பேக்குககளை வாங்குகிறார்கள். இதனால் ஆணுறை விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. 'மக்கள் பொதுவாக மூன்று பேக் ஆணுறை தான் வாங்க விரும்புவார்கள். ஆனால் கடந்த வாரத்தில் அவர்களில் பெரும்பாலானோர் 10 மற்றும் 20 பேக்குகளை வாங்கி உள்ளார்கள்" என்றார்.

    அதிகம் வாங்குகிறார்கள்

    அதிகம் வாங்குகிறார்கள்

    இந்நிலையில் ஹர்ஷல் ஷாவின் கருத்தையே அதே பகுதியைச் சேர்ந்த கடை உரிமையாளர் அஜய் சப்ராவாலும் கூறுகிறார். ஆணுறை விற்பனை குறித்து அவர் கூறுஐகயில் 'இது வேடிக்கையானது, ஏனெனில் பொதுவாக பண்டிகை காலத்தில், குறிப்பாக புத்தாண்டில் விற்பனையில் அதிகரிப்பு காணப்படும். மக்கள் மருந்துகளை சேமித்து வைத்திருக்கிறார்கள், மேலும் ஆணுறைகளையும் அதிகமாக வாங்குகிறார்கள். நான் இயல்பைவிட 25 சதவீதம் அதிகமாக ஸ்டாக் வாங்கி வைத்துள்ளேன்" என்றார்.

    பிறப்பு கட்டுப்பாட்டு பொருள்கள்

    பிறப்பு கட்டுப்பாட்டு பொருள்கள்

    கடந்த ஒரு வாரத்திலிருந்து கருத்தடை மாத்திரைகள் மற்றும் பாலியல் பாதுகாப்பு கிட்டுகள் ஆகியவற்றின் தேவை அதிகரிப்பதைக் கண்டதாக டெல்லி அருகே குருகிராமில் உள்ள மெடிகோஸில் பணிபுரியும் தினேஷ் குமார் சர்மா கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில், ஆணுறைகள் மற்றும் பிற பிறப்பு கட்டுப்பாட்டு பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இயல்பைவிட அதிகமாகவே விற்கிறது என்றார்.

    பெண்கள் அதிகமாக வாங்குகிறார்கள்

    பெண்கள் அதிகமாக வாங்குகிறார்கள்

    டெல்லியின் லஜ்பத் நகரின் இஷா மெடிகோஸைச் சேர்ந்த சுரேஷ் கூறுகையில், பிறப்பு கட்டுப்பாட்டு பொருட்களின் விற்பனையின் அதிகரிப்பது உண்மை தான். அலுவலகங்கள் மற்றும் சந்தைகள் மூடப்பட்ட காலத்திலிருந்து ஆணுறைகளின் விற்பனையில் அதிகரித்துள்ளது. ஆணுறை வாங்குவது இதுவரை தடைசெய்யப்படவில்லை. சுவாரஸ்யம் என்னவென்றால் பெண்கள் கூட இப்போது ஆணுறைகளை வாங்குவதில் இருந்து வெட்கப்படுவதில்லை என்றார். தென் மும்பையில் ஒரு மருத்துவ கடை வைத்திருக்கும் விஷால் ஜோஷி கூறுகையில், 'ஆணுறைகளை வாங்கும் பெண்களின் சதவீதம் ஆண்களை விட அதிகம். பல இல்லத்தரசிகள் ஆணுறைகளையும் கேட்கிறார்கள். விற்பனையில் 15% அதிகரிப்பு உள்ளது. ' ஆணுறைகளைத் தவிர, அவசர கருத்தடை மாத்திரைகளின் விற்பனையும் அதிகமாக உள்ளது. இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கொரோனா வைரஸ் பிரச்சனையால் கருத்தடை பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் என்று என் வாழ்க்கையில் நான் நினைத்ததில்லை" என்றார்.

    ஆர்டர்கள் குவிகிறது

    ஆர்டர்கள் குவிகிறது

    இந்நிலையில் இந்தியா முழுவதும் பாலியல் பொம்மைகளை விற்கும் ஒரு ஆன்லைன் கடையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சுமார் 10 முதல் 15% வரை அதிகரித்துள்ளது, கடந்த 10 நாட்களில் எங்கள் விற்பனையில் ஒரு முன்னேற்றம் உள்ளது. இருப்பினும், கொரோனா பரவல் மற்றும் மக்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக, கடந்த இரண்டு நாட்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்து ஆர்டர்களும் தாமதமாகப் போகின்றன. முடிந்தவரை பல ஆர்டர்களை அனுப்ப முயற்சிக்கிறோம்" என்றார்.

    பார்வையாளர்கள் அதிகரிப்பு

    பார்வையாளர்கள் அதிகரிப்பு

    உலகின் மிகப்பெரிய அந்த தளங்களில் ஒன்று(பெயர் வேண்டாம்). உலகளவில் மக்கள் தங்கள் தளத்திற்கு வருவது 11.6% அதிகரித்துள்ளது என்று பகிர்ந்துள்ளது.. ஒரு சாதாரண நாளில், தங்கள் வலைத்தளத்தில் சுமார் 120 மில்லியன் பார்வையாளர்களே வருவார்கள் , ஆனால் இப்போது கிட்டத்தட்ட 134 மில்லியன் மக்கள் தினசரி அடிப்படையில் சேவையை பெறுகிறார்கள். இந்த வலைதளம் இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இலவச பிரீமியம் சேவையையும் வழங்கி இருக்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+