உலக அளவில் கொரோனா உடன் போராடி மீண்ட 99.7 லட்சம் பேர் - 1.61 கோடி பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 99.7 லட்சம் பேர் மீண்டிருக்கின்றனர்.
மும்பை: உலகம் முழுவதும் 99.7 லட்சம் பேர் கொரோனா உடன் எதிர்த்து போராடி மீண்டிருக்கின்றனர். இது உலக அளவில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ்க்கு 1.61 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்கி 6.47 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரத்தாண்டவமாடி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிகம் ஆளானது அமெரிக்காதான். 44 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு ஆளாகியுள்ளனர். அதே போல பிரேசிலில் 25 லட்சம் பேரும், ரஷியாவில் 8 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 1,384,259 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை, 32,096 என்ற அளவில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை, 2,06,737 என்ற அளவில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,409 என்ற அளவில் அதிகரித்துள்ளது.
Recommended Video
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.61 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6.47 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா வைரஸ்க்கு இன்னமும் மருந்தே கண்டுபிடிக்கவில்லை. அப்படி இருந்து தற்போது கொடுக்கப்படும் சிகிச்சைகளின் அடிப்படையில் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 99.7 லட்சம் பேர் மீண்டு உலக மக்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளனர். கொரோனா தொற்று பாசிட்டிவ் என உறுதியானாலே பயப்பட வேண்டாம். சரியான சத்தான உணவு சாப்பிட்டு அரசு கூறும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் கொரோனாவில் இருந்து மீளலாம் என்று நம்பிக்கை தருகின்றனர் 99.7 லட்சம் பேர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications