பார்க்க சகிக்கலை.. ஓடும் பஸ்ஸுக்கும் அத்துமீறிய காதல் ஜோடி! அதுவும் பட்டப்பகலில் இப்படியா? ஷாக்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் ஓடும் பேருந்தில் ஒரு ஜோடி அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சக பயணி ஒருவர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் அந்த ஜோடிக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும் பேருந்தில் அத்துமீறிய காதல் ஜோடியை கண்டிக்கத்தவறிய நடத்துனர் விசாரணைக்கு ஆளாகியிருக்கிறார்.

சமீப காலமாக பொது இடங்களில் இளம் ஜோடிகள் அத்துமீறுவது அதிகரித்து வருகிறது. பார்க், பீச், மெட்ரோ ரயில் என இவங்க தொல்ல தாங்க முடியல என பலரும் புலம்புவதை பார்க்கலாம். தற்போது சமூக வலைதளங்களின் ஆதிக்கம் பெருகிவிட்ட நிலையில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

சற்று பிசகினாலும் பெரிய பிரச்சனையை சந்திக்க வேண்டும். அப்படி ஒரு சம்பவம் தான் மும்பையில் அரங்கேறி இருக்கிறது. ஓடும் பேருந்தில் அத்துமீறிய இளம் ஜோடி தற்போது சமூக வலைதள வீடியோவால் அம்பலப்பட்டுள்ளார்கள்.

Mumbai Bus crime

மும்பை நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்று நவி மும்பை. அங்குள்ள பன்வெல் பகுதியில் இருந்து கல்யாண் நோக்கி குளிர்சாதன வசதி கொண்ட மாநகராட்சி பேருந்து சென்று கொண்டிருந்தது. கூட்டம் அவ்வளவாக இல்லாத நிலையில் ஒரு சில பயணிகள் மட்டுமே அந்த பேருந்தில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது அந்த அத்துமீறல் சம்பவம் நடந்திருக்கிறது. அந்த பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம் ஜோடி திடிரென பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் தாங்கள் பயணிப்பது பேருந்து, தங்களை சுற்றி பயணிகள் இருக்கிறார்கள் என்று கூட கவனிக்காமல் எல்லை மீறி இருக்கின்றனர். பேருந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி மெதுவாகச் சென்று கொண்டிருந்த நிலையில் பேருந்தில் பணியில் இருந்த நடத்துனர் அதனை கண்டு கொள்ளவில்லை. ஆனால் சக பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதை அடுத்து ஒரு பயணி அவர்கள் அத்துமீறலை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் சம்பவத்தை கவனிக்க தவறிய பேருந்து நடத்துனர், ஓட்டுநரை நவி மும்பை மாநகராட்சி அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துள்ளனர். மேலும் பேருந்தில் காதல் ஜோடியின் மோசமான நடத்தையை கவனிக்க தவறியதற்காக நடத்துனரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பேருந்தில் அத்துமீறிய காதல் ஜோடிக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்திருக்கிறது.

பொது இடம் என்றும் பாராமல் அத்துமீறலில் ஈடுபட்ட அந்த காதல் ஜோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க மும்பையில் கடந்த சில தினங்களாகவே இது பொது இடங்களில் அத்துமீறும் ஜோடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள். ரீல்ஸ் எடுக்கிறேன் என்ற பெயரில் கடந்த சில நாட்களாக மும்பையின் மெட்ரோ ரயில் நிலையங்களில் அரைகுறை ஆடைகளுடன் சிலர் நடனமாடி வருகின்றனர். இதனால் சக பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே பேருந்துகளிலும் காவல்துறை பாதுகாப்பு போட்டால் கூட பரவாயில்லை என கூறும் பயணிகள் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜோடிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+