யோவ் மிலிட்டரி நீ எங்கயா இங்க.. இது ஒரு பெரிய மனுஷன் செய்ற காரியமா .. சச்சின் செய்வதை பாருங்க
மும்பை: ஒவ்வொரு ஆண்டும் மாசி அல்லது பங்குனி மாத பௌர்ணமி நாளில் நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அந்த கையில் மார்ச் 13 தேதியும், மார்ச் 14ம் தேதியான நேற்றும் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் நேற்று ஹோலி பண்டிகையை கொண்டாடினார். அவர் யுவராஜ் மற்றும் அம்பதி ராயுடுவுடன் கொண்டாடிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்தியாவில் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஹோலி பண்டிகையும் ஒன்று. தீபாவளிக்கு அடுத்தபடியாக அதிக பிரபலமான பண்டிகை என்றால் அது ஹோலி பண்டிகை தான்.. வட இந்தியா முழுவதும் இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் மாசி அல்லது பங்குனி மாதத்தில் வரும் பவுர்ணமி நாளில் கொண்டாடப்படும்.. அதாவது பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாதத்தில் வரும் பவுர்ணமி நாளில் கொண்டாடப்படும். இது தீமையை நன்மை வெற்றி கொண்டதை கொண்டாடும் பண்டிகையாகும். அதாவது ஹோலிகா என்ற அரக்கி, தெய்வீக சக்தியால் தீயில் எரிந்து சாம்பலாக்கப்பட்ட நாளாகும். இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக தான் பல வண்ண பொடிகளை தூவி மக்கள் ஹோலி பண்டிகை மக்களால் கொண்டாடப்படுகிறது. இது காம தேவனை, சிவ பெருமான் எரித்த நாளாகவும் மக்களால் கருதப்படுகிறது.

இந்த ஹோலி பண்டிகை இந்தியாவில் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில், வட இந்தியாவில் உள்ள பல்வேறு நடிகர், நடிகைகளும் கொண்டாடினார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது வீட்டில் இருந்து வண்ணம் பூசிய நிலையில் கலர் பொடிகளை பீச்சி அடிக்கும் பைப்புடன் கிளம்பினார். அம்பதி ராயுடுவும் இந்த கொண்டாட்டத்தில் உற்சாகமாக கலந்து கொண்டார்.
சச்சின் டெண்டுல்கருடன் அவரது நண்பர்கள் அனைவரும் ஒன்றாக யுவராஜ் சிங் வீட்டிற்கு சென்றார்கள். அங்கு சட்டை இல்லாமல் எழுந்து வந்து கதவை திறந்த யுவராஜ் சிங்கிற்கு சர்ப்ரைஸ் தரும் வகையில், வீட்டில் யாருப்பா அது என்பது போல் திறக்க வைத்து, கலர் பொடிகள் நிறைந்த தண்ணீரை பீய்ச்சி அடித்தார். அவருக்கு வர்ணம் பூசி மகிழ்ந்தார். அம்பதி ராயுடுவுக்கும் சச்சின் டெண்டுல்கர் வர்ணம் பூசினார்.
யோவ் மிலிட்டரி நீ எங்க இங்க 😂😂😂
— Anshitha 💫🫶🍉 (@AnshithaPrincey) March 15, 2025
இது ஒரு பெரிய மனுஷன் செய்யற காரியமா
யுவராஜும் அம்பதி ராயுடும் இத எதிர்பாக்கல 😁😁😁 pic.twitter.com/qy3RG6hsPy
முன்னதாக ஹோலிக்கு முந்தைய நாள், அதாவது மார்ச் 13 அன்று, யுவி இந்திய மாஸ்டர்ஸ் அணிக்காக விளையாடிய யுவராஜ் சிங், ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸை தோற்கடித்தார். மேலும், சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 2025 இறுதிப் போட்டிக்கு இந்திய அணியை முன்னேற செய்திருக்கிறார் யுவராஜ் சிங். ராய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் யுவராஜ் சிங் 7 சிக்சர்கள் அடித்ததுடன் 30 பந்தில் 59 ரன்கள் எடுத்தார். இதையடுத்து அவருக்கு சர்ப்ரைஸ் தரும் வகையில் சச்சின் அவரை தேடி சென்று வர்ணம் பூசி ஹோலி கொண்டாடியுள்ளார்.
அத்துடன் சச்சின் டெண்டுல்கர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹோலி கொண்டாட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் சச்சின் டெண்டுல்கர் கையில் பிச்சிகாரியுடன் (கலர் பொடி நிறைந்த குழலுடன்) யுவராஜ் சிங்குக்கு வர்ணம் பூச ஆர்வமாக சென்று பூசுவதாக இருக்கிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications