மின்னல் வேகத்தில் பறந்த சைரஸ் மிஸ்திரி கார்.. இத்தனை விதிமீறல்களா? ஐவிட்னஸ் சொல்வது என்ன?
மும்பை: டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
"ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம்" எனப்படும் மிகப் பெரிய கட்டுமான நிறுவனத்தின் தலைவரான பலோன்ஜியின் மகன்தான் சைரஸ் மிஸ்திரி. டாடா சன்ஸ் நிறுவனத்தில் அதிக அளவு பங்குகளை இந்த கட்டுமான நிறுவனம் வைத்துள்ளது.
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக அப்பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து அந்த பதவிக்கு சைரஸ் மிஸ்திரி நியமிக்கப்பட்டார். ஆனால் மிஸ்திரி 4 ஆண்டுகளிலேயே பதவியிலிருந்து விலகினார்.

குஜராத்
இந்த நிலையில் குஜராத்தின் ஆமதாப்பாத்தில் இருந்து மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பைக்கு தனது காரில் மிஸ்திரி பயணம் செய்தார். அப்போது மும்பைக்கு அருகே பால்கர் மாவட்டத்தில் சூர்யா நதியின் மீதுள்ள பாலத்தில் கார் சென்ற போது சாலைத் தடுப்பில் மோதி அந்தக் கார் விபத்துக்குள்ளானது.

சைரஸ் மிஸ்திரி
இதில சைரஸ் மிஸ்திரி, அவருடன் பயணித்த ஜஹாங்கிர் பன்டோல் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்தது குறித்து முதற்கட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மிஸ்திரியும் பன்டோலும் சீட் பெல்ட் அணியவில்லை.

அதிவேகம்
மேலும் காரும் அதி வேகத்தில் பயணித்ததாக சொல்லப்படுகிறது. பால்கரில் உள்ள சரோட்டி செக் போஸ்டை கடந்த பிறகு வெறும் 9 நிமிடங்களில் 20 கி.மீ. தூரத்தை கார் கடந்துள்ளது என்றால் எத்தனை வேகத்தில் கார் சென்றிருக்கக் கூடும். அந்த செக் போஸ்ட் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆராய்ந்தனர்.

9 நிமிடம்
அதிலும் கார் மிக வேகமாக பயணித்து 9 நிமிடங்களில் 20 கி.மீ தூரத்தை கடந்தது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் சைரஸுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ஜஹாங்கிருக்கு இடது காலில் எலும்பு முறிவும் தலையில் காயமும் ஏற்பட்டது. இந்த விபத்திற்கு காரணம் அதிவேகம்தான் என விபத்தை கண்ணால் பார்த்தவர்கள் சாட்சி கூறியுள்ளார்கள். பின் சீட்டில் இருப்பவர்களும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது மோட்டார் வாகன சட்டமாகும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications