மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தாவூத் இப்ராஹிம் உடன் நேரடி தொடர்பு!" புதிய குண்டை தூக்கி போடும் ஷிண்டே.. மகாராஷ்டிராவில் பரபரப்பு

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் தொடரும் நிலையில், இது தொடர்பாக அதிருப்தி அமைச்சர் ஷிண்டே சில பரபரப்பு கருத்துகளை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் இரண்டாவது வாரமாக நீடிக்கிறது. அசாமின் கவுஹாத்தியில் இருக்கும் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடுத்தகட்ட திட்டம் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

சிவசேனா- என்சிபி- பாஜக கூட்டணி ஆட்சி அங்கு நடைபெறும் நிலையில், இந்த கூட்டணி அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக தற்போது அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்துள்ளது.

சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்.. ஏக்நாத் ஷிண்டே மகன் கிண்டல்.. பரபரப்பில் மகாராஷ்டிரா!சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்.. ஏக்நாத் ஷிண்டே மகன் கிண்டல்.. பரபரப்பில் மகாராஷ்டிரா!

ஷிண்டே

ஷிண்டே

இதனிடையே ஷிண்டே கூட்டணி அரசை இன்று கடுமையாக விமர்சித்துள்ளார். குண்டுவெடிப்பு மூலம் அப்பாவி மும்பை மக்களைக் கொல்ல காரணமான தாவூத் இப்ராகிமுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்களை பால்தாக்கரேயின் கட்சி எப்படி ஆதரிக்க முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்த கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவரும் மற்ற எம்எல்ஏக்களும் போர்க்கொடி தூக்கி உள்ளதாகவும் பால்தாக்கரேவின் சிவசேனாவைக் காப்பாற்றும் முயற்சியில் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அட்டாக்

அட்டாக்

மகா விகாஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியை விமர்சித்தே ஷிண்டே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். தாவூத் இப்ராஹிமின் உறவினர்கள் தொடர்பாக பணமோசடி வழக்கில் தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் நவாப் மாலிக் சிறையில் உள்ளார். அவரை குறிப்பிட்டு, தேசியவாத காங்கிரஸ் கூட்டணியைச் சாடும் வகையிலேயே ஷிண்டே இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

எப்படி ஆதரிப்பது

எப்படி ஆதரிப்பது

ஏக்நாத் ஷிண்டே மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்களை "ஆன்மா இல்லாத உடல்கள்" என்று கூறிய சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் விமர்சித்து இருந்த நிலையில், அதற்கும் ஷிண்டே பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர், "மும்பையில் குண்டுவெடிப்பு நடத்தி அப்பாவி மும்பை வாசிகளைக் கொன்ற தாவூத்துடன் நேரடித் தொடர்பு உள்ளவர்களை பாலாசாகேப் தாக்கரேவின் சிவசேனா எப்படி ஆதரிக்க முடியும்? இதை எதிர்க்கவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.

உயிரே போனாலும் பிரச்சினை இல்லை

உயிரே போனாலும் பிரச்சினை இல்லை

இந்த நடவடிக்கை நம்மை மோசமான நிலைக்கோ அல்லது மரணத்திற்கோ இட்டுச் சென்றாலும் கவலைப்பட வேண்டாம்" என்று ட்வீட் செய்துள்ளார். மற்றொரு ட்வீட்டில், பால்தாக்கரேவின் சித்தாந்தத்தையும் காப்பாற்றும் போது உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டாலும் கூட அதிர்ஷ்டசாலியாகக் கருதுவதாக ட்வீட் செய்து இருந்தார். அவரது ட்வீட்தான் இப்போது பேசுபொருளாக உள்ளது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் இரண்டாவது வாரமாக அரசியல் குழப்பம் தொடர்கிறது. சிவசேனா- என்சிபி- பாஜக கூட்டணி ஆட்சி அங்கு நடைபெறும் நிலையில், இந்த கூட்டணி அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக தற்போது அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்துள்ளது. இதனால் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

English summary
Eknath Shinde wondered how could Bal Thackeray's party support the people having a direct connection with Dawood Ibrahim: (மகாராஷ்டிர அரசுக்கு தாவூத் இப்ராஹிம் உடன் தொர்பு) Shinde quesetions about Dawood Ibrahim connection in maha govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X