போதைப் பொருள் சர்ச்சை.. 'வாட்ஸ் அப்' ஆல் சிக்கிய தீபிகா படுகோன்!.. கங்கனா ரணாவத் செம்ம நக்கல்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: போதை மருந்து பழக்கத்தின் பக்க விளைவே மன அழுத்தம் என்று கூறி நடிகை தீபிகாவை கங்கணா ரணாவத் கிண்டல் செய்துள்ளார்.

சுஷாந்த் சிங் மரண வழக்கில் போதை மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏனெனில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி ரியா சக்ரபர்த்தியின் வாட்ஸ் அப் உரையாடலில் போதை மருந்து வாங்குவது தொடர்பாக இருந்தது. இதை அமலாக்கப் பிரிவினர் கண்டுபிடித்தனர்.

அதன்பிறகு தான் போதை மருந்து தடுப்புப் பிரிவு இந்த விசாரணையை துவக்கியது. விசாரணைக்கு பின்னர் நடிகை ரியா சக்ரபர்த்தி, ரியாவின் சகோதரர் உள்ளிட்ட சிலர் கைது செய்தனர். போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீசார் தற்போது பாலிவும் திரை உலகில் பலருடைய வாட்ஸ் அப் பதிவுகளை வைத்து விசாரித்து வருகிறார்கள்.

போலீசார் தீபிகாவுக்கு சம்மன்

போலீசார் தீபிகாவுக்கு சம்மன்

இப்படி சோதிக்கும் போது தீபிகா படுகோனுக்கும் அவரது மேலாளர் கரிஷ்மா பிரகாஷுக்கும் இடையே நடந்த வாட்ஸ் அப் உரையாடலைத் தனியார் செய்தி சேனல் ஒன்று வெளியிட்டது. அந்த உரையாடலால் தற்போது தீபிகா படுகோனேவின் மேனேஜரை போலீசார் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பி உள்ளார்,

மன அழுத்தம் வரும்

மன அழுத்தம் வரும்

இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத் தீபிகா படுகோனேவை பெயரை குறிப்பிட்டே ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார். அவர் தனது பதிவில், "எங்கே நான் சொல்வதைத் திரும்பச் கூறுங்கள் பார்க்கலாம் போதை மருந்து பழக்கத்தின் பின் விளைவாக மன அழுத்தம் வரும். உயர் சமூக, பணக்காரக் குழந்தைகள், மிகவும் கண்ணியமானவர்கள், நன்றாக வளர்க்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் தங்களின் மேஜேனர்களிடம் சரக்கு இருக்கிறதா என்று கேட்கிறார்கள்" இவ்வாறு கங்கனா கூறியுள்ளார்.

நக்கல் ட்விட்

நக்கல் ட்விட்

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட அடுத்த நாள், தீபிகா தனது ட்விட்டர் பக்கத்தில் "எங்கே நான் சொல்வதைத் திரும்பச் சொல்லுங்கள் பார்க்கலாம். மன அழுத்தம் ஒரு நோய்" என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக இப்படி கங்கனா நக்கல் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தீபிகாவுக்கு எதிராக ட்வீட்

தீபிகாவுக்கு எதிராக ட்வீட்

அதுவும் கங்கனா தனது பதிவில் போதை மருந்து பழக்கம் இருக்கும் பாலிவுட் பிரபலங்களைப் புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்து ஹேஷ்டேக் போட்டுள்ளார். அத்துடன் தீபிகா படுகோன் என்றும் ஹேஷ்டேக்கில் குறிப்பிட்டுள்ளார். அண்மைக்காலமாக பாலிவுட் பிரபலங்கள் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+