மகாராஷ்டிராவில் டெல்டா பிளஸ் வைரஸால் 3-வது மரணம்- 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட முதியவர் உயிரிழப்பு!
மும்பை: மகாராஷ்டிராவில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் (டெல்டா பிளஸ் வேரியன்ட்) பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட 69 வயது முதியவர் ஒருவர் 3-வதாக உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் உருமறி கொரோனா டெல்டா வைரஸானாது. கொரோனா டெல்டா வைரஸ் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கடுமையான கொரோனா பாதிப்புக்கு காரணமாக இருந்து வருகிறது டெல்டா வைரஸ்.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 40,120 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கேரளா மாநிலத்தில் மட்டும் 21,445 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்டா பிளஸ் வைரஸ்
மகாராஷ்டிராவில் 6388 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 160 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா டெல்டா பிளஸ் என்கிற வைரஸ் பாதிப்பால் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அம்மாநிலத்தின் ரத்தினகிரி மாவட்டத்தில் டெல்டா பிளஸ் வைரஸால் ஜூன் 13-ந் தேதி 80 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். அவர் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் கூட போட்டுக் கொள்ளவில்லை.

தடுப்பூசிகள் போட்டும்..
இதனைத் தொடர்ந்து ஜூலை 27-ல் 63 வயது மும்பை பெண் ஒருவர் டெல்டா பிளஸ் வைரஸுக்கு பலியானார். இத்தனைக்கும் அவர் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர். மேலும் வீட்டிலேயேதான் இருந்தார். வெளியே எங்கும் செல்லாத நிலையில் டெல்டா பிளஸ் வைரஸால் அவர் மரணித்தார்.

உறவினர்களுக்கும் பாதிப்பு
இந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 2 பேர் டெல்டா பிளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video

டெல்டா பிளஸால் 3-வது மரணம்
தற்போது ராய்காட் மாவட்டத்தில் 69 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்தான் என்கின்றனர் மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அதிகாரிகள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications