மகாராஷ்டிரா: ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தேவேந்திர பட்னாவிஸ்- ஏக்நாத் ஷிண்டே ஆஜர்!
மும்பை: மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைப்பதற்காக ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து உரிமை கோரினார் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ். முன்னதாக பாஜக சட்டசபை குழுவின் தலைவராகவும் மகாயுதி கூட்டணியின் தலைவராகவும் தேவேந்திர பட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் நாளை மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றது. கடந்த மாதம் நவம்பர் 23-ந் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட போதும் பாஜக கூட்டணியால் உடனடியாக ஆட்சி அமைக்க முடியவில்லை.

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை கேட்டு இடைக்கால முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அடம் பிடித்து வந்தார். இதனை பாஜக நிராகரித்து வந்தது. இதனால் சிவசேனாவுக்கு உள்துறை, துணை முதல்வர் பதவி, சபாநாயகர் பதவியை ஏக்நாத் ஷிண்டே கோரினார். இதனையும் பாஜக ஏற்க மறுத்தது. ஒரு கட்டத்தில் மகன் ஶ்ரீகாந்த் ஷிண்டேவை துணை முதல்வராக்க கோரிக்கை வைத்துப் பார்த்தார் ஷிண்டே. இதனையும் பாஜக மேலிடம் ஏற்காததால் ஷிண்டே கடும் அதிருப்தி அடைந்தார்.
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் புதிய அரசு நாளை பதவியேற்கும் என அறிவிக்கப்பட்டது. மும்பை ஆசாத் மைதானத்தில் இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளன.
#WATCH | Shiv Sena chief Eknath Shinde and BJP leader Devendra Fadnavis arrive at Raj Bhavan in Mumbai to stake claim to form the government in the state.
— ANI (@ANI) December 4, 2024
Devendra Fadnavis to take oath as CM of Maharashtra tomorrow, 5th December pic.twitter.com/RHnJZE3MAX
இதனிடையே மும்பையில் இன்று மகாராஷ்டிரா பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மகாராஷ்டிரா பாஜக சட்டசபை குழுத் தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டமும் மகாயுதி கூட்டணியின் கூட்டமும் நடத்தப்பட்டது. மகாயுதி கூட்டணி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை இன்று நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தேவேந்திர பட்னாவிஸ். சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோருடன் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்தார் தேவேந்திர பட்னாவிஸ். மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் நாளை பதவியேற்க உள்ளார். இதனால் மகாராஷ்டிராவில் நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications