Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dharmendra: ரூ.335 கோடி சொத்து..100 ஏக்கர் பண்ணை வீடு! பாலிவுட் முடி சூடா மன்னர் தர்மேந்திரா விடை பெற்றார்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் தர்மேந்திரா, இன்று நவம்பர் 24ம் தேதி தனது 89வது வயதில் கலாமானார். வயது மூப்பு காரணமாக நீண்ட நாட்களாகவே அவதிப்பட்டு வந்த தர்மேந்திரா, மும்பையில் உள்ள தனது வீட்டில் காலமானார். இந்தி சினிமாவில் பல ஆண்டுகள் முடி சூடாத மன்னராக இருந்த தர்மேந்திரா யார்.. அவரது சாதனைகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

இந்தி சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் தர்மேந்திரா.. மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த அக்டோபர் மாத இறுதியில் மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போதே அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், அப்போது அவர் உடல்நிலை சீரானது.

Dharmendra Farewell Bollywood s He-Man Who Revolutionized Indian Cinema with Sholay Dharam Veer

தர்மேந்திரா மரணம்

இதையடுத்து அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கிடையே டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 12 நாட்களில் அவர் உயிரிழந்தார். வரும் டிசம்பர் 8 அன்று அவருக்கு 90 வயது ஆகியிருக்கும். ஆனால், அதற்கு முன்பே அவர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். தர்மேந்திராவின் இழப்பு பாலிவுட் சினிமாவுக்கே பேரிழப்பாகவே கருதப்படுகிறது.

யார் இவர்!

லூதியானா அருகே உள்ள சஹ்னேவால் கிராமத்தில் 1935 டிசம்பர் 8ஆம் தேதி பிறந்தவர் தர்மேந்திரா.. அவரது இயற்பெயர் தர்மேந்திரா கேவல் கிருஷ்ணன் தியோல். கிராமத்தில் வளர்ந்த அவர், பள்ளி செல்லவே பல கிமீ நடந்து செல்ல வேண்டி இருந்தது. பாலிவுட் உச்ச நட்சத்திரமாக வளர்ந்த பிறகும் கூட அவர் தனது இளமைக் காலத்தைக் கடைசி வரை மறக்கவில்லை. பல நேர்காணல்களில் இளமைக் காலம் குறித்தும் அப்போது பட்ட கஷ்டங்கள் குறித்தும் வெளிப்படையாகவே பேசியுள்ளார்.

ஃபிலிம்ஃபேர் நடத்திய போட்டி ஒன்றில் வென்ற அவர். 1960இல் வெளியான 'தில் பீ தேரா ஹம் பீ தேரே' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், 1961இல் 'ஷோலா அவுர் ஷப்னம்', 1963இல் 'பந்தினி' ஆகிய படங்கள் மூலம் அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட் அடிக்கவே இந்தி சினிமாவின் தலைசிறந்த கதாநாயகனாக தர்மேந்திரா உருவெடுத்தார்.

வரிசையாக ஹிட் படங்கள்

அவரது வலிமையும் வசீகரமும் இந்தி சினிமாவையே கட்டிப்போட்டது. 'ஃபூல் அவுர் பத்தர்' (1966), 'அனுபமா' (1966), 'சத்யகம்' (1969), 'மேரா காவ்ன் மேரா தேஷ்' (1971), 'ஷோலே' (1975), 'சுப்கே சுப்கே' (1975), 'ட்ரீம் கேர்ள்' (1977) ஆகிய படங்கள் அவருக்கு மட்டும் வெற்றிப் படங்களாக அமையவில்லை. மாறாக ஒட்டுமொத்த இந்தி சினிமாவுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுத்தது.

அவரது கம்பீரமான உடலை பார்த்த பாலிவுட் பத்திரிக்கைகள் அவரை He-Man of Bollywood என்றே அழைத்தனர்.. உடல் வலிமை, கவர்ச்சியான தோற்றத்தைத் தாண்டியும் அவர் மனிதாபிமானமிக்க நபராகவே இருந்தார். பலருக்கு அவர் உதவிகளையும் செய்துள்ளார்.

ஹேமா மாலினி காதல்

திரையில் தர்மேந்திரா ஒரு ஆக்‌ஷன் கதாநாயகனாக மட்டுமின்றி காதல் மன்னராகவும் இருந்தார். அப்போது இந்தி சினிமாவின் கனவுக் கன்னியாக இருந்த ஹேமா மாலினியை அவர் காதலித்தார். இது பாலிவுட்டின் மிகவும் பேசப்பட்ட காதல் கதைகளில் ஒன்றாகும். 'தும் ஹசீன் மெயின் ஜவான்' (1970) படப்பிடிப்பின் போது தொடங்கிய இவர்களின் காதல், 'ஷோலே' வரை தொடர்ந்தது.

முதல் மனைவி பிரகாஷ் கவுர் இருக்கும்போதே, ஹேமா மாலினியை திருமணம் செய்து கொண்டார். இதற்காக விமர்சனங்கள் எழுந்த போதிலும், தர்மேந்திரா தனது முடிவில் உறுதியாக இருந்தார். ஹேமா மாலினியும் கூட தனது சுயசரிதையில் இதை குறிப்பிட்டுள்ளார். அப்போது பல்வேறு பிரச்சனைகள் வந்தபோதும் தர்மேந்திரா தனக்கு துணையாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சொத்து மதிப்பு

பாலிவுட் மன்னரான தர்மேந்திராவுக்கு மொத்தம் ரூ.335 கோடி சொத்து இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. தர்மேந்திரா குடும்பத்துடன் மும்பையில் இருந்தாலும் கூட அவர் லோனாவாலாவில் இருக்கும் தனது 100 ஏக்கர் பிரம்மாண்ட பண்ணை வீட்டுக்கு அடிக்கடி செல்வார். இதுபோக அவர் பல சொகுசு கார்களையும் வைத்துள்ளார்.

தலைசிறந்த நடிகர்

பாலிவுட்டில் பிளாக் அண்ட் ஒயிட் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த தர்மேந்திரா காலத்திற்கு ஏற்ப தன்னை தானே அப்டேட் செய்து கொண்டே இருந்தார். இதன் காரணமாகவே காலத்தை கடந்தும் அவரால் நிற்க முடிந்தது. மேலும், விருதுகளும் கௌரவங்களும் அவரை தேடி வந்தன. பத்ம பூஷண், பிலிம்வேர் தொடங்கிப் பல விருதுகளை அவர் வாங்கியுள்ளார்.

தர்மேந்திராவுக்கு பிரகாஷ் கவுர் மற்றும் ஹேமா மாலினி என இரு மனைவிகளும், சன்னி தியோல், பாபி தியோல் என்ற மகன்களும் உள்ளனர். மேலும், ஈஷா தியோல், அஹானா தியோல், விஜேதா மற்றும் அஜித் ஆகிய மகள்களும் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+