ரயிலில் துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ்! முஸ்லீம்களை தேடி தேடி சுட்டாரா? பரபர பேச்சு! நடந்தது என்ன?
மும்பை: இன்று அதிகாலை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) கான்ஸ்டபிள் சேத்தன் குமார் சௌத்ரி, என்பவர் மகாராஷ்டிராவில் ஒரு ரயில்வே போலீஸ் அதிகாரி, 3 பயணிகளை சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட பயணிகள் இஸ்லாமியர்கள் என்று கூறப்படுவதால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
ஜெய்ப்பூர்-மும்பை சென்ட்ரல் எக்ஸ்பிரஸில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. கான்ஸ்டபிள் சேத்தன் குமார் சௌத்ரி தனது மூத்த அதிகாரி RPF உதவி சப்-இன்ஸ்பெக்டர் டிகா ராம் மீனா என்பவரை முதலில் சுட்டுக்கொலை செய்துள்ளார்.
இவருக்கு மன ரீதியான பாதிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில்தான் அவர் விடுமுறையில் இருந்து வந்து பணிக்கு சேர்ந்து உள்ளார். பணிக்கு சேர்ந்த முதல் நாளே அவர் தனது சீனியரை சுட்டுகொன்றுள்ளார்.

தேடி தேடி சுட்டாரா? அவர் முதன்முதலில் தனது சீனியரை B5 இல் உள்ள இருக்கையில் சுட்டார். அங்கிருந்து பின்னர் B5 இல் தாடி வைத்து இருந்த நபரை தேடி பிடித்து சுட்டுகொன்றுள்ளார். அதன்பின் அப்போது பான்ட்ரி காரில் தாடி வைத்து இருந்த நபரை அடையாளம் கண்டு கொன்றுள்ளார்.
பின்னர் தாடி அடையாளத்துடன் மற்றொரு பயணியை குறிவைக்க S6 சென்று அங்கேயும் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். இடையில் இருந்த மற்ற பயணிகள் யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல் இவர் சென்றுள்ளார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படும் நிலையில் சரியாக இஸ்லாமியர்களை தேடி தேடி கொன்றதாக கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட மற்ற மூன்று பேருக்கும் நீண்ட தாடி இருந்துள்ளது. இஸ்லாமியர்களின் தோற்றம் இருந்துள்ளது. சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திய சேத்தன் குமார் சௌத்ரி தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார்.
என்ன நடந்தது? துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு சேத்தன் குமார் சௌத்ரி பேசியது வீடியோவாக வெளியாகி உள்ளது. அதில், இவர்கள் எல்லாம் பாகிஸ்தானில் இருந்து இயங்குகிறார்கள். மீடியா சொல்வதை நம்புங்கள். மீடியாவுக்கு தெரியும். இந்த மக்களை பற்றி மீடியா உங்களுக்கு காட்டும். நீங்கள் இந்தியாவில் வாழ வேண்டும் என்றால் மோடிக்கும், யோகிக்கும் வாக்களியுங்கள். அவர்கள் மட்டும் உங்களை காப்பார்கள், என்று கூறியதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோவை பல்வேறு பத்திரிகையாளர்கள், உண்மை கண்டறியும் பத்திரிகையாளர் முகமது சுப்பையர் போன்றவர்கள் பகிர்ந்து உள்ளனர். ஜெய்ப்பூரிலிருந்து மும்பை நோக்கி 12956 என்ற எண் கொண்ட விரைவு ரயில் இன்று காலை 5.23 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது மும்பை அருகே போரிவலி பால்கார் ரயில் நிலையத்தை தாண்டிய போதுதான் இந்த துப்பாக்கி சூடு நடந்து உள்ளது. அந்த ரயிலில் இருந்த காவலர் சேத்தன் தனது துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். இதையடுத்து அந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் தாஹிசார் ரயில் நிலையத்தில் தப்பியோடினார்.

செயினை பிடித்து இழுத்து அங்கிருந்து இவர் தப்பி ஓடி இருக்கிறார். தகவலறிந்த போலீஸார் அவரை விரட்டி சென்று பிடித்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டை ஏன் நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications