நெஞ்சே கலங்குது.. 200 டு 300 மீ. கேப்பில் கிடந்த சடலங்கள்.. பிஞ்சுவைகூட விடலயே.. அதுக்குன்னு இப்டியா
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஒரே நேரத்தில் எடுத்த பகீர் முடிவை பாருங்க
மும்பை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரின் சடலங்களும், ஆற்றில் மீட்கப்பட்ட சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது... இது தொடர்பான விசாரணையையும் போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.
புனே மாவட்டம் தவுன்ட் தாலுகா யவத் கிராமப்பகுதியில் ஓடிக்கொண்டிருக்கிறது பீமா என்ற ஆறு.. இந்த ஆற்றில், நேற்று முன்தினம் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து விரைந்து சென்ற போலீசாரும், சடலத்தை மீட்டனர்.. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே, அதே பகுதியில், மேலும் 3 சடலங்கள் கிடந்தன..

ஆற்றில் சடலம்
இதனால் அங்கு பரபரப்பு சூழ்ந்து கொண்டது.. விஷயத்தை கேள்விப்பட்டு போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்துவிட்டனர்.. அவர்கள் 4 உடல்களையும் மீட்டு தீவிர விசாரணையை துவங்கினர்.. அப்போதுதான், இவர்கள் 4 பேருமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது.. அப்படியானால், வேறு ஏதேனும் சடலங்கள் ஆற்றில் கிடக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடுதல் வேட்டை அந்த பகுதியில் முடுக்கிவிடப்பட்டது.. அப்போது மேலும் 3 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன... அந்த 3 சிறுவர்களும், அதே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது.

பிஞ்சுகள்
பிணமாக மீட்கப்பட்டவர்கள், காம்காவ் பகுதியை சேர்ந்த மோகன் உத்தம் பவார் 50, அவரது மனைவி சங்கீதா பவார் 45, மகள் ராணி 27, மருமகன் சாம்ராவ் பண்டித் 32, பேரப்பிள்ளைகள் ரிதேஷ் 7, சோட்டு சாம்ராவ் 5, கிருஷ்ணா 3 வயது என்பது தெரியவந்தது.. மீட்கப்பட்ட 7 பேரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.. எனினும் 7 பேரின் மரணம் மற்றும் அதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

200 முதல் 300 மீ இடைவெளி
இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "ஆற்றில் ஒவ்வொருவரின் உடல்களும் 200 முதல் 300 மீட்டர் இடைவெளியில் மீட்கப்பட்டது. சம்பவம் குறித்து தற்கொலை உள்பட எல்லா கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்" என்றார்.. இதனிடையே, இந்த தற்கொலை சம்பவம் குறித்து சில தகவல்களும் வெளியாகி வருகின்றன.. மோகன் உத்தம் பவாரின் மகன் ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம்.. ஆனால், குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி அந்த பெண்ணையே, அவர் திருமணமும் செய்து கொண்டுள்ளார்... மேலும், அவர் அந்த பெண்ணுடன் எங்கோ ஓடிவிட்டாராம்.

மிரட்டனாங்களா
இதெல்லாம் சேர்ந்து, அந்த குடும்பத்தை மிகப்பெரிய அவமானத்தில் தள்ளிவிட்டதாக சொல்கிறார்கள்.. மகன் காதல் திருமணம் செய்ததால் வேதனை அடைந்து மோகன் உத்தம் பவார் குடும்பத்தினர் தற்கொலை முடிவை எடுத்தார்களா? அல்லது யாராலும் மிரட்டப்பட்டதால் இந்த துயர முடிவை எடுத்தார்களா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மகாராஷ்டிரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications