எல்லை மீறி போறீங்க! டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கிய பெண்.. வீடியோ காலில் நிர்வாணமாக்கிய கும்பல்!
மும்பை: இந்தியாவில் டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் பொதுமக்களிடம் பணத்தை மோசடி செய்யும் கும்பலின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மகராஷ்டிராவில் இளம் பெண்ணை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக கூறி அவரிடம் சுமார் 2 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததோடு, சோதனை என்ற பெயரில் அந்தப் பெண்ணின் ஆடைகளை கழற்றச் சொல்லி நிர்வாணமாக்கியும், அதனை வீடியோவாக பதிவு செய்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வயதானவர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள நபர்கள் பெண்களை குறிவைத்து அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து பேசி மோசடி நடைபெறுவதாகவும், எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டுமென போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே சட்டவிரோத பணப் பறிமாற்றம் தங்கள் வங்கிக் கணக்கில் நடைபெற்றுள்ளதாக, தொழிலதிபர்களை மிரட்டியும், டிஜிட்டல் கைது செய்துள்ளதாகக் கூறி சைபர் கிரைம் மோசடி நடப்பதாகவும், போலீசார் எச்சரிக்கின்றனர்.
சட்ட விரோத பரிமாற்றம் தங்கள் வங்கி கணக்கில் நடைபெற்றிருக்கிறது, வெளிநாட்டிலிருந்து வந்த பார்சலில் போதை பொருட்கள் இருக்கிறது என கூறி ஸ்கைப் வீடியோ காலில் காவல்துறை உடை அணிந்து சிலர் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வருகின்றனர் சைபர் கிரைம் கொள்ளையர்கள். உங்களை கைது செய்ய தற்போது உடனடியாக அதிகாரிகள் வருவார்கள், இணைப்பை அவருக்கு பார்வர்ட் செய்கிறேன் என பதட்டதோடு பேசுவார்கள்.
மேலும், உச்ச நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து இருக்கிறது, ரிசர்வ் வங்கி உங்கள் வங்கி கணக்கை முடக்கி இருக்கிறது என ஏதாவது ஒரு மத்திய அரசு துறையின் பெயரை சொல்லி மிரட்டுவார்கள். எதிர்முனையில் இருப்பவர்கள் பதட்டத்தில் சிக்குவது தெரிந்து விட்டால், ஆயிரம் ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாய் வரை அவர்கள் பணத்தை சுருட்டி விடுவார்கள். இப்படி இந்த மோசடி கும்பலின் அட்டுழியம் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடியே இது குறித்து பேசியிருக்கிறார்.
இந்நிலையில் மகராஷ்டிராவில் இளம் பெண்ணை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக கூறி அவரிடம் சுமார் 2 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததோடு, சோதனை என்ற பெயரில் அந்தப் பெண்ணின் ஆடைகளை கழற்றச் சொல்லி நிர்வாணமாக்கியும், அதனை வீடியோவாக பதிவு செய்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மும்பையைச் சேர்ந்த 26 வயதான இளம் பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள பிரபல தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.
கடந்த 19ஆம் தேதி அவருக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர் தான் டில்லி காவல்துறையில் பணியாற்றுவதாகவும், தற்போது சிறையில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் பண மோசடி வழக்கில் உங்களுக்கு தொடர்பு இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். உங்களை கைது செய்யப் போகிறோம் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த பெண் தனக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை எனவும், அவர் யார் என்று தெரியாது எனக் கூறியிருக்கிறார்.
சிறிது நேரத்தில் வீடியோ காலில் தொடர்பு கொண்ட மோசடி நம்பர்கள் அந்த பெண்ணை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாகவும், யாரிடமும் தெரிவிக்காமல் ஹோட்டலுக்கு சென்று தங்க வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து அவர் தங்கும் விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறார். தொடர்ந்து வீடியோ காலில் அழைத்து அந்த நபர்கள் அந்த பெண்ணின் வங்கி கணக்கு விவரங்களை பெற்று அவரது வங்கிக் கணக்கில் இருந்த ஒரு லட்சத்து 78 ஆயிரம் ரூபாயை பறித்துள்ளனர்.
மேலும் உடலில் அங்க அடையாளங்களை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறி அந்த பெண்ணின் ஆடைகளை அகற்ற கூறியுள்ளனர். இதனால் பயந்து போன அந்த பெண் ஆடைகளை கழற்றி இருக்கிறார். சிறிது நேரத்தில் வீடியோ கால் துண்டிக்கப்பட்டது. மீண்டும் அழைத்த நபர்கள் அந்த பெண்ணின் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர். அதை அடுத்தே தான் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என தெரிந்து கொண்ட அந்த பெண் இது தொடர்பாக மும்பை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications