கொரோனா- பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் மற்றொரு சகோதரரும் மரணம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: கொரோனா பாதிப்பால் இந்தி நடிகர் திலீப்குமாரின் மற்றொரு சகோதரர் இசான் கான் காலமானார்.
பழம் பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமரின் சகோதரர்கள் இசான் கான், அஸ்லம் கான். இவர்கள் இருவரும் அண்மையில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகளில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் அஸ்லம் கான் கடந்த மாதம் கொரோனாவால் காலமானார்.
இதனிடையே இசான் கானும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். லாக்டவுன் அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக திலீப் குமார், மனைவி சாய்ரா பானு ஆகியோர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறியிருந்தனர்.
தற்போது திலீப் குமாரின் சகோதரர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications