கண்ணாடி திருப்பினா ஆட்டோ ஓடுமா?.. சூர்யகுமார் செய்யும் தவறு என்ன?.. தினேஷ் கார்த்திக் தந்த அட்வைஸ்!
மும்பை: ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து சொதப்பி வரும் சூழலில் அதனை சரிசெய்வதற்காக தினேஷ் கார்த்திக் யோசனை கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி கண்ட சூழலில் 2வது போட்டியில் படு மோசமான தோல்வியை தழுவியது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர்களுக்குள் 117 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 11 ஓவர்களில் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் இலக்கை எட்டி வெற்றி கண்டது.

சூர்யகுமார் சொதப்பல்
இந்த போட்டியில் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது சூர்யகுமார் யாதவின் இன்னிங்ஸ் தான். இந்தியாவுக்காக வழக்கமாக மிடில் ஆர்டரில் களமிறங்கும் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக வெளியேறியதால் சூர்யகுமார் யாதவ் வாய்ப்பு பெற்றுள்ளார். என்னதான் டி20 கிரிக்கெட்டில் நம்.1 வீரராக இருந்தாலும் இந்த தொடரில் 2 முறை தொடர்ந்து டக் அவுட்டாகி ஏமாற்றினார். அதுவும் ஒரே மாதிரியான ஸ்டைலில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

தினேஷ் கார்த்திக் யோசனை
இந்நிலையில் இதனை சரிசெய்வது குறித்து தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார். அதில், டி20 கிரிக்கெட்டிலும் சூர்யகுமார் யாதவ் இதே போன்ற பந்துகளில் அவுட்டாகியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் என்பதால் அவர் தடுமாறவில்லை. தொடர்ச்சியாக அவருக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காததும் சொதப்பலுக்கு காரணமாக இருக்கலாம். ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது இல்லாததால் கண்டிப்பாக சூர்யகுமார் யாதவுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்துக்கொண்டே தான் இருக்க வேண்டும்.

இடத்தை மாற்ற வேண்டும்
என்னைப் பொறுத்தவரையில் சூர்யகுமார் யாதவ் வேறு ஏதாவது ஒரு இடத்தில் களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். அதாவது 4வது இடத்தில் ஹர்திக் பாண்ட்யா களமிறங்கிவிட்டு, 5வது இடத்தில் கே.எல்.ராகுல் ஆட வேண்டும். 6வது விக்கெட்டிற்கு மட்டும் சூர்யகுமார் களமிறங்கினால் நன்றாக இருக்கும். டி20 கிரிக்கெட்டில் நன்றாக ஆடும் அவர், கடைசி 14 - 18 ஓவர்கள் ஆடினால் ஆட்டத்தையே மாற்றுவார்.

என்ன காரணம்
கடைசி 10 - 15 ஓவர்களில் உள்வட்டத்தில் 4 - 5 ஃபீல்டர்கள் தான் இருப்பார்கள். எனவே அந்த சமயத்தில் சூர்யகுமார் தனது ஸ்ட்ரைக்கை தொடங்கினால் நிச்சயம் பெரிய ஷாட்களை ஆடி ரன் சேர்ப்பார். கிட்டத்தட்ட அவர் ஒரு ஃபினிஷரை போல செயல்படுவார் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். அடுத்து வரும் போட்டியில் இந்த திட்டத்தை தான் ரோகித் செயல்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications