திருபாய் அம்பானிக்கு இத்தனை பெருந்தன்மையா? "மிடில் கிளாஸ்" நீடாவை முகேஷுக்கு மணமுடித்தது எப்படி?
மும்பை: நீடா அம்பானியும் முகேஷ் அம்பானியும் ஸ்டார் தம்பதிகளாக இருந்து வருவது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர்களுடைய காதல் கதை எப்படிப்பட்டது தெரியுமா, நீடாவிடம் முகேஷ் காதலை சொன்ன விதம் தெரியுமா?
உலக பணக்காரர்களின் ஒருவரானவர் இந்தியாவை சேர்ந்தவர் முகேஷ் அம்பானி. இவர் மிகப் பெரிய தொழிலதிபர். இவரது மனைவி நீடா அம்பானி. இருவரும் மும்பையில் ஆன்டர்சன் சாலையில் உள்ள அன்டீலியா வீட்டில் வசித்து வருகிறார்கள்.
தற்போது இவர்களுக்கு பல பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகள் இருக்கின்றன. பல சரக்கு கடை, போன், நெட்வொர்க், பெட்ரோல் உள்ளிட்ட பல துறைகளில் முகேஷ் அம்பானி தடம்பதித்து வருகிறார். இவர் திருபாய் அம்பானியின் மூத்த மகனாவார்.

இவருடைய 22 ஆவது வயதில் நுழைந்தவர்தான் நீடா அம்பானி. இவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த எளிமையான நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். நீடாவின் பெயர் நீடா தலால் ஆகும். திருமணமானவுடன்தான் அவர் அம்பானி என்பதை தனது பெயரான நீடாவுடன் சேர்த்துக் கொண்டார். இவர்களுடைய திருமணம் அழகான காதல் திருமணம்.
இவர்களுக்கு 1985 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. நீடா அம்பானி ஒரு ஆசிரியை. மேலும் அவர் பரதநாட்டிய கலைஞரும் ஆவார். இவருடைய நடனம் அம்பானி குடும்பத்தினருக்கு பிடித்துவிட்டது. மும்பையில் நவராத்திரி விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நவராத்திரியையொட்டி நீடா அம்பானி நடனமாடினார்.
அந்த விழாவில் திருபாய் அம்பானியும் அவரது மனைவியும் முகேஷின் தாயுமான கோகிலாபென் அம்பானியும் இருந்தனர். அவர்களுக்கு நீடாவின் நடன நிகழ்ச்சி மிகவும் பிடித்துவிட்டது. கட்டினால் இந்த பெண்ணைத்தான் நம் மகன் முகேஷுக்கு கட்ட வேண்டும் என்றும் இவர்தான் நம் வீட்டின் சிறந்த மருமகள் என்றும் முடிவு செய்துவிட்டனர்.
இதையடுத்து விழா ஏற்பாட்டாளர்களிடம் இருந்து நீடாவின் வீட்டு முகவரியை பெற்றுக் கொண்டனர். அவரது வீட்டிற்கு சென்ற திருபாய் அம்பானி, தன்னுடைய மகனை சந்திக்குமாறு நீடாவிடம் கூறினர். முகேஷ் பணக்காரர், செல்வாக்குமிக்கவர் என்பதால் திருமணத்திற்காக தம்மை சந்திக்க சொல்கிறார்கள் என நீடா நினைக்கவில்லை. ஆனால் தன் அப்பா, அம்மாவுக்கு பிடித்துவிட்டதால் தனக்கு ஏற்ற சாய்ஸ் நீடா என்ற முடிவுடன்தான் முகேஷ் இருந்தாராம்.

திருமணத்திற்கு முன்னர் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தனியாக சந்தித்தனர். அப்போதெல்லாம் முகேஷ் நடுத்தர வர்க்கத்தினரின் கஷ்டங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவரை தன்னுடன் டபுள் டெக்கர் பேருந்தில் பயணம் செய்ய வைத்துள்ளார். அது போல் மும்பையின் தெருவோரக் கடைகளில் உணவு அருந்தியுள்ளனர்.
இவ்வாறு இருவரும் தினமும் சந்திக்கும் போதுதான் முகேஷ் தனது காதலை நீடாவிடம் வெளிப்படுத்தினார். அதற்கு நீடாவும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் ஒரு கண்டிஷன் வைத்தார். அதாவது திருமணமானாலும் நடனத்தை தான் விட மாட்டேன் என்றார். அதற்கு அம்பானி குடும்பமும் பச்சைக் கொடி காட்டிவிட்டன. நீடா அம்பானி தனது வேலையை விட்டுவிட்டு ரிலையன்ஸ் குழுமத்தை ஏற்று நடத்தினார். இவருக்கும் இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, இஷா அம்பானி ஆகியோராவர்.
இவர்களுடைய காதல் கதை இப்படி இருக்க, ஆனால் சில மீடியாக்கள் என்ன சொல்கின்றன என்றால் ஒரு முறை நீடா அம்பானியும் முகேஷ் அம்பானியும் காரில் சென்று கொண்டிருந்த போது முகேஷ் தனது காதலை வெளிப்படுத்திய போது அதற்கு நீடா எந்த பதிலையும் சொல்லாமல் இருந்ததாகவும், காதலை ஏற்கும் வரை காரை எடுக்க மாட்டேன் என முகேஷ் அடம்பிடித்ததாகவும் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு ஏராளமான வண்டிகள் வரிசை கட்டி நின்றதை அடுத்து நீடா காதலுக்கு ஓகே சொல்லியதாக கூறுகின்றன. இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. பணம் பணத்துடன்தான் சேரும் என்பார்கள். இந்த காலத்தில் மாத சம்பளம் ஆயிரக்கணக்கில் இருந்தாலே பிரஸ்டீஜ் பார்க்கும் நிலையில் அந்த காலத்திலேயே பணக்காரராக இருந்த திருபாய் அம்பானி, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நீடாவை தேடிப் பிடித்து தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications