208 கிலோ டூ 100 கிலோ! புது மாப்பிள்ளை ஆனந்த் அம்பானியின் உடல் எடையை குறைத்தவர் யார் தெரியுமா?
மும்பை: முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி 108 கிலோ உடல் எடையை வெறும் 18 மாதங்களில் குறைத்த ஃபிட்னஸ் டிரெய்னர் யார் தெரியுமா?
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பார்கள். அது போல் நம் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் , நம்மால் சிறப்பு இயங்க முடியும். அந்த வகையில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒவ்வொரு நடவடிக்கைகளை ஒவ்வொவரும் கையாள்கிறார்கள்.

உடற்பயிற்சி, யோகா, ஏரோபிக், நடனம், நீச்சல் பயிற்சி, விளையாட்டு உள்ளிட்டவைகளின் மூலம் உடல் எடை குறைகிறது. உடற்பயிற்சி என்று வரும் போது அதற்கு போதிய பயிற்சி தேவை, இதற்கு பயிற்றுநரும் அவசியமாகிறார். அந்த வகையில் உலக கோடீஸ்வரர்களுள் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியை பற்றி பார்ப்போம்.
அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 208 கிலோ அதாவது மிகவும் குண்டான உடல் தேகத்தை கொண்டிருந்தார். இதையடுத்து திடீரென 108 கிலோ எடை குறைந்து ஸ்லிம்மாக காட்சியளித்தார். அதுவும் 18 மாதங்களில் 108 கிலோ எடை என்பது சாதாரண விஷயம் கிடையாது. இதற்கு உருதுணையாக இருந்தவர் பயிற்சியாளர் வினோத் கண்ணா.
இவர்தான் ஆனந்த் அம்பானியை ஒல்லியாக்கியவர் வினோத் கண்ணா. இவர் பாலிவுட்டின் பிரபலமான ஜிம் டிரெய்னராவார். நீடா அம்பானி, குமார் மங்கலம் பிர்லா, அனன்யா பிர்லா, ஜான் ஆபிரஹாம், ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ஹர்ஷவர்தன் ரானே, விவேக் ஓபராய், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டோருக்கு வினோத் கண்ணாதான் பயிற்றுநர். இவர் 12 சிட்டிங்கிற்கு 1.5 லட்சம் கட்டணம் வசூலிக்கிறாராம்.
ஆனந்த் அம்பானியின் எடை குறைப்பு புகைப்படத்தை பார்த்த பலரும் அவரது விடா முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்திருந்தார். ஆனந்த் அம்பானிக்கு கடுமையான ஆஸ்துமா இருந்தது. அதை சரி செய்ய ஸ்டீராய்டுகள் கொடுத்ததாகவும் இதனால்தான் அவருடைய உடல் எடை கூடியதாகவும் நீடா அம்பானி கூறியிருந்தார்.
ஆனந்த் அம்பானியின் உடல் எடை குறித்து வினோத் கண்ணா கூறியிருந்ததாவது: தனது உடல் எடை குறைய ஆனந்த் அம்பானி மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார். அதிகமாக சாப்பிடுவது, ஜங்க் ஃபுட்களை சாப்பிடுவது என்பதை கைவிடுவது என்பது ஆனந்த் அம்பானிக்கு மிகவும் சவாலானதாக இருந்தது. அவருக்கு டயட் பிளானை வகுத்து கொடுத்தேன். அதுவும் புரதங்கள், குறைந்த கலோரிகள், நார்ச்சத்துகளை கொண்ட உணவு வகைகளையே பரிசீலனை செய்தேன் என்றார். வினோத் கண்ணா ஃபிட்னஸ் டிரெய்னராவதற்கு முன்பு ஹவுஸ் கீப்பிங், செக்யூரிட்டி உள்ளிட்ட வேலைகளில் பணிபுரிந்திருந்தார்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications