வேத மந்திரம் முழங்க! வீட்டுக்கு வரும் மருமகள் ராதிகாவை நீடா அம்பானி எப்படி வரவேற்கிறார் பாருங்க!
மும்பை: ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்த விழாவின் போது மருமகள் ராதிகா மெர்சன்ட்டை மாமியார் நீடா அம்பானி எப்படி வரவேற்றார் தெரியுமா?
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது தோழி ராதிகா மெர்சன்ட்டுடன் காதல் வயப்பட்டார். இதையடுத்து இருவரது காதலுக்கும் பெரியோர் பச்சைக் கொடி காட்டி விட்டனர்.

ராதிகா மெர்சன்ட்டின் தந்தை தொழிலதிபர் ஆவார். அதாவது என்கோர் ஹெல்த்கேரின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் துணைத் தலைவரான வீரேன் மெர்ச்சன்ட்- ஷைலன் மெர்ச்சன்ட்டின் மகளாவார். ஆனந்துக்கும் ராதிகாவுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிலையில் இவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு திருமணம் என முடிவு செய்யப்பட்டது. ஆனாலஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சன்ட்டின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. அதாவது அவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை திருமணமும் அதற்கு முந்தைய சடங்குகளும் நடைபெறும். இதுகுறித்து ஒரு அழைப்பிதழ் வைரலாகி வருகிறது.

இவர்களது திருமணம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகரில் நடைபெறுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஆனந்த் அம்பானி குஜராத் ஜாம்நகரில் தங்கி அம்பானி கிரீன் எனர்ஜி என்ற வளாகம் கட்டும் பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் திருமண அழைப்பிதழின் உள் பக்கம் முகேஷும் நீடாவும் கைப்பட எழுதியுள்ளனர். ஜாம்நகர் அம்பானி குடும்பத்திற்கு மிகவும் பிடித்தமான இடமாகும்.
இந்த நிலையில் இவர்களது திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நிச்சயதார்த்தத்தின் போது நீடா அம்பானி, தனது மருமகள் ராதிகாவை வரவேற்ற விதம் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது மந்திரங்கள் ஓத, இசைக் கருவிகள் முழங்க இந்த வரவேற்பு நடந்தது.
பின்னர் ராதிகாவுக்கு மாமியார் நீடா ஆரத்தி எடுத்தார். பிறகு மணியோசையை இசைத்தார். ஏதோ கும்பம் போல் இருந்ததை எடுத்து ராதிகாவின் முகத்திற்கு நேராக சுற்றினார். பிறகு ராதிகா, மாமியார் நீடாவின் காலில் விழ, நீடாவோ ஆசிர்வாதம் செய்து மருமகளை கட்டி அணைத்தார். பிறகு மாமியார் முகேஷ் காலிலும் ராதிகா விழுந்து வணங்கினார்.

இதையடுத்து தனது ஓரகத்தியும் மூத்த மருமகளுமான ஸ்லோகாவை வணங்கி அவரின் ஆசியையும் அரவணைப்பையும் பெற்றார். அருகில் நின்றிருந்த ஆகாஷ் அம்பானியிடமும் ஆசிர்வாதம் பெற்ற ராதிகா, நாத்தனார் ஈஷாவிடம் சென்றார். இருவரும் கட்டி அணைத்தனர். இப்படி நீடா ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களையும் அறிமுகம் செய்து வைக்க அவர்களை எல்லாம் ராதிகா வணங்கினார்.
இதையடுத்து ஆனந்த் அம்பானி, முகேஷ் அம்பானியின் கையை பிடித்துக் கொண்டு நிச்சயதார்த்த மேடைக்கு சென்றார் ராதிகா. இப்போது திருமணம் நடைபெறவுள்ள நிலையில் அம்பானி குடும்பத்தினரின் காஸ்ட்யூம் மீதே அனைவரது எதிர்பார்ப்பும் உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications