ஊருக்கே ரூ 1500-க்கு போன் விற்கும் ரிலையன்ஸ்.. நீடா அம்பானியின் போன் விலை தெரியுமா? சிறப்புகள் என்ன?
முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானியின் செல்போனின் விலை என்ன தெரியுமா?
மும்பை: என்னாது நீடா அம்பானியின் செல்போனின் விலை இத்தனை கோடியா? அப்படி அதில் என்னதான் இருக்கிறது?
இந்தியாவில் பணக்காரர்களில் ஒருவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி. இவரது மனைவி நீடா அம்பானி. இவர் மும்பை இந்தியன்ஸ் அணியை உற்சாகப்படுத்துவார். அது போல் புதிய தயாரிப்புகளையும் அவ்வப்போது அறிமுகப்படுத்துவார்.
இவரும் வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வருகிறார். 1985 ஆம் ஆண்டு முகேஷை நீடா திருமணம் செய்து கொண்டார். உலகில் மிக விலையுயர்ந்த 10 வீடுகளில் அம்பானியின் அன்டீலியாவும் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே..

600 பணியாளர்கள்
இந்த வீட்டை பராமரிக்க மட்டுமே முழு நேரமும் 600 பணியாளர்கள் உள்ளார்களாம். சிகாகோ நாட்டை சேர்ந்த கட்டடக் கலை நிபுணரால் வடிவமைக்கப்பட்டது. இந்த வீட்டில் 27 மாடிகள் உள்ளன. மொத்தம் 4 லட்சம் சதுர அடியாகும். இங்கு லிப்ட்கள் மட்டுமே 11 உள்ளன. அந்த வீட்டின் உயரமே 570 அடியாகும். அத்தனை பிரம்மாண்டமான கட்டடம் அன்டீலியா ஆகும்.

நீடா அம்பானி
நீடா அம்பானி பெரும்பாலும் விலை மதிப்புள்ள பொருட்களையே விரும்புவார். தான் பயன்படுத்தும் பொருட்களில் தனித்துவம் இருப்பதையும் அவர் விரும்புவாராம். வெளிநாட்டு பிராண்டட் பைகள், செருப்புகள், பர்ஸ்கள் என அனைத்திலும் ஆடம்பரம். இவ்வளவு ஏன் நீடா தினமும் குடிக்கும் டீயின் விலையே பல லட்ச ரூபாயாம். இதெல்லாம் சரி ஊருக்கே குறைந்த விலையில் போன் கொடுத்த அம்பானியின் மனைவி எந்த மாதிரியான போனை பயன்படுத்துகிறார் தெரியுமா.

போனின் விலை
அந்த போனின் விலையை கேட்டால் கிறுகிறு என வரும். நீடா பயன்படுத்தும் போனின் மாடல் பால்கான் சூப்பர்நோட்டா ஐபோன்6. இது பிங்க் டயமண்ட் போன் ஆகும். இதன் விலை 48 மில்லியன் டாலர். இந்திய மதிப்பில் தெரிந்து கொள்ள வேண்டுமா.. கொஞ்சம் தண்ணீர் குடிச்சிக்கோங்க... ரூ 315 கோடியாம். இந்த போன் முழுக்க முழுக்க 24 காரட் தங்கம் மற்றும் இளஞ்சிவப்பு தங்கத்தால் ஆனது.

தங்கம், வைரம்
தங்கம், வைரம், பிளாட்டினம் ஆகிய உலோகங்கள் உள்ளன. இந்த போனை அத்தனை எளிதில் யாராலும் உடைக்க முடியாது. அது போல் ஹேக் செய்யவும் முடியாது. அப்படியே யாராவது ஹேக் செய்ய முயற்சித்தால் போதும் உடனே நீடா ஜிக்கு மெசேஜ் பறந்துவிடும். இந்த போன் மாடல் 2014 இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனில் பிளாட்டினம் உள்ளதால் அதை உடைக்கவே முடியாதாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications