உலகமே வியந்து பார்க்கும் அம்பானி வீட்டு கல்யாணம்.. ஆனந்த் அம்பானியின் கையை பாத்தீங்களா? 5 ஸ்பெஷல்ஸ்
மும்பை: ஆனந்த் அம்பானி - ராதிகா திருமண நிகழ்வு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், ஆனந்த் வைத்திருக்கும் சில 5 முக்கிய உடமைகள் குறித்து சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அம்பானி குடும்பத்தில் எந்த நிகழ்வு நடந்தாலும் அது வைரலாகி விடும்.. அதிலும், அம்பானி குடும்பத்தினரின் உணவு, உடமைகளும் பொதுமக்களை திரும்பி பார்க்க வைத்து வருகின்றன.

அப்படித்தான், கடந்த வருடம், நீடா அம்பானியின் பெயரில் ஒரு கலாச்சார மண்டபம் கடந்த வருடம் திறந்து வைக்கப்பட்டது.. இந்த நிகழ்வில் ஆனந்த் அம்பானி கலந்து கொண்டிருந்தார்.
வாட்ச்: அப்போது அவர் கையில் கட்டியிருந்த கடிக்காரம், பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. சுமார் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள கடிகாரத்தை ஆனந்த் தன்னுடைய கையில் கட்டியிருந்தார்.. Patek Philippe என்ற வணிக்குறியின் "Grandmaster Chime watch" என்று இதனை சொல்கிறார்கள். இந்த கடிக்காரத்தில் சாதாரண கடிகாரத்தை விட 20 துல்லியமான அம்சங்கள் அடங்கியிருக்கிறதாம்.. இந்த கடிகாரத்தை கண்டுபிடிக்கவே 11 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியிருந்தன.
அதேபோல, சமீபத்தில் ஆனந்த் அம்பானி உருவாக்கிய வனந்தரா-வில் மரங்கள் விலங்குகளுக்கு மத்தியில் 3 நாள் பிரம்மாண்ட விழா நடைபெற்றது.. இந்த விழாவில், வழக்கம்போல் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது விழாவில்,
ஆனந்த் அம்பானி கட்டியிருந்தது Richard Mille வாட்ச், பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது..
புவி ஈர்ப்பு விசை: முழுக்க முழுக்க sapphire கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும் இந்த RM 56-02 (Richard Mille RM 12-01 Tourbillon) வாட்ச்சின் அடிப்பகுதியானது, 5ம் தர டைட்டானியத்தால் செய்யப்பட்டது. 0.35 மிமீ தடிமன் கொண்ட ஒரே ஒரு கயிற்றால் தொங்கவிடப்பட்டிருக்கும் இந்த வாட்ச்சில், புவி ஈர்ப்பு விசையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் "டூரில்லியன் இஸ்கேப்மெண்ட்" (tourbillon escapement) என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. நேரத்தை மிக துல்லியமாக கணக்கிட்டு சொல்லும் இந்த வாட்ச்சின் விலை 2.2 மில்லியன் டாலர் அதாவது ரூ. 18.2 கோடியாம்.

உலகிலேயே வெறும் 10 மாடல்களே இருக்கும் ரிச்சர்ட் மில்லே RM 56-02 கைக்கடிகாரத்தை ஆனந்த அம்பானி அணிந்திருந்தது அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது, ஆனந்த அம்பானியின் கைக்கடிகாரம் பொதுமக்களை கவர்ந்து வருகிறது.
5 உடமைகள்: ஆனந்த் அம்பானிக்கும் - ராதிகா மெர்ச்சண்டுக்கும் நேற்று மும்பையில் திருமணம் நடந்து முடிந்த நிலையில், ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றிருந்தனர்.. அப்போது பெரும்பாலானோரின் கவனம், அனந்த் அம்பானி கையில் கட்டியிருந்த வாட்ச் மீதே விழுந்தது. இந்நிலையில், ஆனந்த அம்பானியின் திருமணம் வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், அவரது 5 ஆடம்பரமான உடமைகள் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அந்த 5 உடமைகளும் இவைகள்தான்:
1. பாம் ஜுமேராவில் உள்ள வில்லா: கடந்த 2022ல் ஆனந்த் அம்பானி தன்னுடைய அப்பாவிடமிருந்து துபாயிலுள்ள பாம் ஜுமேராவில் வில்லாவை பெற்றார். இதற்கு சுமார் ரூ.640 கோடி செலவாகியதாம். இந்த வில்லாவில் 10 படுக்கையறைகள், ஒரு சலூன், ஒரு பெரிய டைனிங் ரூம், ஒரு மசாஜ் சென்டர் மற்றும் 70 மீட்டர் நீளமுள்ள கடற்கரை உள்ளது.
2. ரிச்சர்ட் மிலே கடிகாரம்: ரிச்சர்ட் மிலே ஆர்எம் 12-01 டூர்பில்லியன் (Richard Mille RM 12-01 Tourbillon) என்ற ஒரு கடிகாரத்தை ஆனந்த் அம்பானி அணிந்துள்ளார்.. சர்வதேச அளவில் இதில், மொத்தமே 30 வாட்ச்கள் உள்ள நிலையில்,
அதில் ஒன்றினை ஆனந்த் அணிந்திருக்கிறார்.. இந்த வாட்சின் ஸ்பெஷாலிட்டியே, கார்பனால் தயாரிக்கப்பட்டதாகும்.. இதன் விலையோ ரூ.12.5 கோடியாம்.
3. ரோல்-ராய்ஸ் பாண்டம்: ரோல்ஸ் ராய்ஸ் என்பது உலகின் மிக ஆடம்பரமான கார்களில் ஒன்றாகும். இதில், புதிய ரோல்ஸ் ராய்ஸ் பாண்தம் காரை ஆனந்த் வாங்கியுள்ளார்... இந்த காரின் ஆரம்ப விலை ரூ.9.5 கோடி என்கிறார்கள்.
4. பென்ட்லி கான்டினென்டல் ஜிடி: ஆனந்த் அம்பானி "பென்ட்லி கான்டினென்டல் ஜிடிசி ஸ்பீட்" கார் ஒன்றினை வைத்திருக்கிறார்.. பிரிட்டிஷ் வடிவமைத்த கார்களில் இதுவும் ஒன்றாகும்.. இந்த காரின் விலை ரூ.4.5 கோடி மதிப்புடையதாக கூறப்படுகிறது.
5. கிராண்ட்மாஸ்டர் சைம்: படேக் பிலிப் (Patek Philippe) நிறுவனம் தயாரித்த கிராண்ட்மாஸ்டர் சைம் (Grandmaster Chime) என்ற வாட்ச், ஆனந்த் அம்பானி வைத்திருக்கிறார்.. இந்த வாட்ச்சின் விலை 18 கோடி ரூபாய்க்கு மேல் என்கிறார்கள்.. இந்த வாட்ச் பிரத்தியேகமான முறையில் 6 வாட்ச் மட்டுமே தயாரிக்கப்பட்டது. இதில் ஒன்றுதான் ஆனந்த் அம்பானி வைத்திருக்கிறார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications