ஆனந்த் அம்பானி திருமணம்! வண்ண வண்ண சூப்பரான ரிட்டர்ன் கிஃப்ட்கள் தயார்! பாருங்க
மும்பை: ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சன்ட் திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு பார்வையற்ற கலைஞர்கள் உருவாக்கும் மெழுகுவர்த்தி பரிசாக அளிக்கப்படும் நிலையில் அது எப்படி இருக்கும்? யாருடையது தயாரிப்பு தெரியுமா?
ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ உள்ளிட்ட ஏராளமான தொழில்களை செய்து வருபவர் முகேஷ் அம்பானி. இவருடைய தந்தை திருபாய் அம்பானி போட்ட விதையை இன்று ஆலமரமாக்கியுள்ளார் முகேஷ். இவர் தற்போது உலக பணக்காரர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகிய இருமகன்களும் இஷா அம்பானி என்ற மகளும் உள்ளனர். இதில் ஆகாஷ் அம்பானிக்கு வைர வியாபாரியின் மகள் ஸ்லோகா மேத்தாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
எப்போதும் முகேஷ் அம்பானி- நீடா அம்பானியே பேசும் பொருளாக இருந்து வந்த நிலையில் ஆனந்த் அம்பானிதான் கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தார். இதற்கு காரணம் அவருடைய உடல் எடைதான், சுமார் 208 கிலோ எடை இருந்த அவர் தீவிர உடற்பயிற்சிகளை செய்து 108 கிலோவாக கொண்டு வந்தார். அதுவும் 18 மாதங்களில் இத்தகைய அரிய மாற்றத்தை நிகழ்த்தி காட்டினார்.

இவருடைய கடும் உழைப்பை நெட்டிசன்கள் புகழ்ந்து வந்தனர். இந்த நிலையில் இவர் ராதிகா மெர்சன்ட்டுடன் டேட்டிங்கில் இருந்து வந்தார். ராதிகா என்கோர் ஹெல்த்கேரின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் துணைத் தலைவரான வீரேன் மெர்ச்சன்ட்- ஷைலன் மெர்ச்சன்ட்டின் மகளாவார். இதையடுத்து இரு வீட்டாரும் பேசி இவர்களுக்கு நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு கோலாகலமாக நடந்தது. இந்த நிலையில் இவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது.
இதற்காக மார்ச் 1, 2, 3 ஆகிய தேதிகளில் திருமணமும் அதை சார்ந்த சடங்குகளும் நடத்தப்படுகின்றன. இந்த திருமணம் அம்பானி குடும்பத்திற்கு சொந்தமான குஜராத்தில் ஜாம் நகரில் உள்ள மாந்தோப்பில் நடைபெறுகிறது. இதன் அருகே புலிகள் சரணாலயமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த திருமண ஏற்பாடுகளை மணீஷ் மல்ஹோத்ரா கவனித்து கொள்கிறார் என்கிறார்கள்.

திருமணத்திற்கு தில்ஜித் தோசான்ஜ் மற்றும் ரிஹான்னாவின் நடன கச்சேரி இருப்பதாக வதந்திகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில் திருமணத்திற்கு வருவோருக்கு என்ன கிப்ட் தரலாம் என யோசித்த நிலையில் மெழுகுவர்த்தியை பரிசளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மெழுகுவர்த்திகளை மகாபலேஸ்வரில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளி கைவினைக் கலைஞர்கள் தயாரிக்கிறார்கள்.
இந்தியாவின் பாரம்பரிய கலைகளையும் கைவினை கலைஞர்களையும் சிறப்பிக்கும் விதமாக இது அமைந்துள்ளது. இதற்கான முயற்சிகளை ஈஷா அம்பானியின் ஸ்வதேஷ் எனும் குழுமம் செய்து வருகிறது. இந்த குழுமம் பாரம்பரிய கலைகளுக்கான அமைப்பாகும். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஸ்வதேஷ் பல திறமையான கைவினை கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கிறது.
இவர்களுடைய நிச்சயதார்த்தம் பாரம்பரிய குஜராத்தி முறையில் நடைபெறுகிறது. ராதிகா மெர்சன்ட் குஜராத்தி என்பதால் அந்த முறைப்படி கோலாகலமாக நடந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications