அம்பானி மருமகள் ராதிகாவின் ஹேண்ட் பேக்! தம்மாதுண்டில் செல்போன் கூட வைக்க முடியாது! விலை தெரியுமா?
மும்பை: முகேஷ் அம்பானியின் மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் வைத்திருக்கும் ஹேண்ட் பேக்கின் விலை என்ன தெரியுமா?
இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி- நீடா தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. தனது எடையை 6 மாதங்களில் 100 கிலோ வரை குறைத்து இணையத்தில் பேசும் பொருளானார்.

இந்த நிலையில் இவருக்கும் இவருடைய தோழியும் என்கோர் நிறுவனத்தை சேர்ந்த ராதிகா மெர்சன்ட்டுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரது திருமணத்திற்கும் பெற்றோர் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு இருவருக்கும் குஜராத்திய முறைபடி கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிலையில் அவர்களது திருமணம் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 1 முதல் 3ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. ஜாம்நகரில் கிரீன்ஸ் என்ர ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில்தான் இவர்களுக்கு இந்த திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி நடந்து வருகின்றன.
இதற்காக ஜாம் நகரே விழாக் கோலம் பூண்டது. இந்த நிலையில் மகனின் திருமணத்தையொட்டி அப்பகுதி கிராம மக்களுக்கு விருந்து வைக்க முகேஷ் அம்பானி 51 ஆயிரம் கிராமமக்களுக்கு அறுசுவை விருந்து படைத்தார். இந்த விருந்தில் முகேஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சன்ட் ஆகியோர் தங்களால் கைகளால் உணவை பரிமாறினர்.
இந்த நிகழ்வுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், மெட்டா சிஇஓ மார்க் ஜூக்கன்பெர்க் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். அது போல் எம்எஸ் தோனி, நடிகர் ஷாருக்கான், ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். அது போல் உலக பாப் பாடகி ரிஹான்னா முதல் முறையாக இந்தியா வந்து இது போன்றொரு ராப் பாடல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
பொதுவாக முகேஷ் அம்பானி வீட்டில் விசேஷம் என்றால் அவர்கள் வீட்டு பெண்கள் அணிந்திருக்கும் ஆடை அணிகலன்கள் மீது அனைவருக்கும் கண் இருக்கும். அதன் விலை என்ன, அது எங்கு வாங்கப்பட்டது, அதற்கு ஏன் இத்தனை விலை என்றெல்லாம் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.
அந்த வகையில் ராதிகா மெர்சன்டின் தந்தையும் மிகப்பெரும் பணக்காரர். இனி முகேஷ் அம்பானி- நீடா தம்பதியின் இளைய மருமகளாக போகிறார். அவர் மட்டும் சாதாரண பொருட்களையா பயன்படுத்துவார். அவர் Hermes Morphose நிறுவனத்தின் மினி பேக் வைத்திருக்கிறார். அதன் விலை ரூ 2 கோடியாம்.
இந்த பையில் ஒரு செல்போன் கூட போட முடியாது, இது 2 கோடியா என பலர் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். இன்னும் சிலர் அம்பானி மருமகள்ன்னா சும்மா என கேட்கிறார்கள்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த அபு ஜானி- சந்தீப் கலெக்ஷன் வெளியீட்டு விழாவின் போது சேலையின் நிறத்திற்கேற்ப பிங்க் நிறத்தில் அணிந்திருந்த hermes kelly pink crocodile leather bag இன் விலை 1.60 கோடி ரூபாயாகும். அது போல் கடந்த ஆண்டு கேட்வே ஆப் இந்தியா நடத்திய ஒரு நிகழ்ச்சியில் வெள்ளை நிற கவுனில் வந்த அவர் நீல நிற பையில் வந்திருந்தார். அந்த பை The lady doir bag ஆகும். இதன் விலை 20.90 லட்சம் ஆகும்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications